Pm Modi's Garbo Lyrics-பிரதமர் மோடி எழுதிய பாடல் இணையத்தில் வைரல்..!
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய பாடல் இசையுடன் கலந்து இணையத்தை கலக்கி வருகிறது.
Pm Modi's Garbo Lyrics
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மிகப் பிரபலமாகக் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று நவராத்திரி விழா. ராஸ் கர்பா இசையில் பகவான் கிருஷ்ணர் மற்றும் கோபியர்களுக்கு இடையேயான பகவான் கதைகள் மற்றும் உணர்ச்சிகள் இந்த விழாவில் சொல்லப்படும்.
இந்த விழா குஜராத் மாநிலம் உட்பட பல மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வருடம் வருடம் இந்து மக்களால் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த பண்டிகை நாளை நவராத்திரி பண்டிகை முதல் நாள் துவங்குகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி எழுதிய பாடல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருது.
Pm Modi's Garbo Lyrics
அதாவது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரதமர் மோடி கர்பா என்ற பாடல் எழுதியுள்ளார். தற்போது இந்த பாடலை கார்போ என்ற தலைப்பில் பாடகி பானுஷாலி பாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு தனிஷ்க் பாக்சி இசையமைத்து இருக்கிறார். இந்த பாடல் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியால் நிறுவப்பட்ட ஜஸ்ட் மியூசிக் என்ற இசை லேபிளின் கீழ் வீடியோவாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் கலாச்சார பண்முகத் தன்மை ஒற்றுமை ஆகியவற்றை கூறுகிறது. இந்த பாடல் 3 நிமிடம் 10 வினாடிகள் கொண்டதாக இருக்கிறது. இந்த பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே பல லட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்திருக்கிறது.
கீழே உள்ள இந்த இணைப்பை க்ளிக் செய்து பாடலைக் கேட்கலாம்
மேலும், இந்த பாடல் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து பாடகி த்வானி பானுஷாலி பகிர்ந்துள்ளார். அதில் அவர் பிரதமர் மோடியால் எழுதப்பட்ட இந்த கர்பா பாடலை இசையமைப்பாளர் தனிஷ்க் பாக்சியும் நானும் ரொம்ப ரசித்தோம்.இதேபோல புதிய தாளம், அமைப்பு மற்றும் சுவையுடன் ஒரு பாடலை உருவாக்க விரும்புகிறோம். இந்தப் பாடல் வீடியோவை வெளியிட்டு உதவியர்களுக்கு நன்றி என கூறியுள்ளார்/
Pm Modi's Garbo Lyrics
இதனை அடுத்து இப்பாடலின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி, மோடியுடன் பணியாற்றியது எனக்கு பெருமை என்று கூறி இருக்கிறார். மேலும், இந்த கர்பா பாடலை பிரதமர் மோடி டிவிட்டரில் பகிர்ந்து, இந்த பாடல் சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. இது பல நினைவுகளை திரும்பக் கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக நான் எழுதவில்லை. கடந்த சில நாட்களாக ஒரு புதிய கர்பாவை எழுத முடிந்தது. அதை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து பலரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.