இந்தியா வந்த 6 பேருக்கு ஒமிக்ரான்? பீதி வேண்டாம்; அலட்சியமும் கூடாது

மும்பைக்கு வந்த வெளி நாட்டு பயணிகளில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு, ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என்பது, சோதனை முடிவில் தெரியவரும்.

Update: 2021-12-01 02:45 GMT

உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வருகிறது, ஒமிக்ரான் வைரஸ் பரவல். தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டு, பின்னர் இங்கிலாந்து, பிரேசில், ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. மிகத்தீவிரமான, வேகமாக பரவும் இவ்வகை வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மும்பை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் சிலருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. ஒமிக்ரான் பரவல் உள்ள நாடுகளில் இருந்து மும்பைக்கு வந்தவர்களில் 6 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு, ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பது, சோதனை முடிவில் தெரியவரும்.

மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். பயணிகளை தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைக்கிறோம். எனினும், வெளி நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கிறோம். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து வருகிறோம் என்றார்.

மருத்துவர்கள் கூறுகையில், ஒமிக்ரான் வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்; அதே நேரம் பொது இடங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிந்தல், கைகழுவுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டவே கூடாது என்றனர். 

Tags:    

Similar News