நாஸ்டர்டாமின் தீர்க்க தரிசனங்கள் : இஸ்ரேல் மூன்றாம் உலகப்போர்..!

இஸ்ரேல்- முஸ்லிம் நாடுகளிடையே நடக்கும் போர் மூன்றாம் உலகப்போரை உருவாக்கும்.

Update: 2024-10-10 06:16 GMT

நாஸ்டர்டாமின் இந்தியா மீதான கணிப்பு 

சிரியா, ஜுடியா, பாலஸ்தீன நாடுகள் துண்டாடப்பட்டு புதிய நிலம் உருவாக்கப்பட்டு நம்பிக்கைகள் சிதறுண்டு புதிய சட்டத்தோடு ஒரு நாடு உருவாகும். இஸ்ரேல் நாடு 1948ல் உருவாக இருப்பதை நாஸ்டர்டாம்ஸ் 500 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டார். 20ம் நூற்றாண்டு முடிவதற்குள் தன் பகை நாடுகளை வென்று மிக ஆழமாக அந்த மண்ணில் இஸ்ரேல் உட்கார்ந்து விடும் என அவர் பதிவு செய்துள்ளார்.

மத்திய கிழக்கில் இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையே போர் வரும். அந்த மதங்களைப் பின்பற்றுபவர்கள் அழிவதோடு அவர்களுடைய நாடுகளும் அழியும். மக்களின் செல்வத்தையும் ஆதரவையும் பெற்ற இரு தரப்பாருமே வலிமை மிக்கவர்கள் தான். உலக அரசியலில் யார் பெரியவர் என்ற போட்டியில் அந்தப் போர் நிகழும். தங்கள் இறையாண்மையில்  மற்ற நாடுகள் குறுக்கிடுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். போர் 2000-2025ற்குள் நடக்கும்.

2015ற்கு பிறகு முஸ்லீம் நாடுகளுக்கும் இஸ்ரேலுக்குமிடையே மோதல் அதிகரிக்கும். இஸ்ரேல் மிகுந்த இன்னலுக்குள்ளாகும். இதன் பாதிப்பு ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி, பிரான்ஸ்  வரை பரவும். போர்டாக்ஸ், டாலோஸ் நகரங்களின் தலைவர்கள் சிறை பிடிக்கப்படுவார்கள். பின்பு கொலை செய்யப்படுவார்கள். இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் தொல்லை தந்து கொண்டிருக்கும் போது இஸ்ரேலோடு சேர்ந்து அமெரிக்காவும், ஐரோப்பாவும், போரில் பங்கெடுக்கும். இந்த ஐரோப்பியர்களுக்கும் முஸ்லீம் நாடுகளுக்கும் இடையேயான மூன்றாம் உலகப் போராக வெடிக்கும்.

மூன்றாம் உலகப்போரின் போது இரு நாடுகளுக்குமிடையே சமாதானம் செய்து வைக்க இந்தியா முயலும். இதற்கு பரிகாரமாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று பெட்ரோலியத்தை இந்தியாவிற்கு வழங்கும். இன்னொரு நாடு கோதுமையை வழங்கும். இந்த நிகழ்வுகள் 2025 காலகட்டத்தில் நிகழும். 2028 நவம்பர் மாத காலகட்டத்தில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரட்டன் போன்ற நாடுகள் தங்கள் உயர்நிலையை இழக்கும். விண்ணகத்தில் நிகழும் கிரகமாற்றங்களே இதற்கு காரணமாக இருக்கும்.

மேற்சொன்னவையெல்லாம் நாஸ்டர்டாம்ஸ் கணித்தவை. சற்றேரக்குறைய அவருடைய கணிப்புகள் நடந்து வருகிறது. அவர் முதல் உலகப்போரிலிருந்து ஆறாம் உலக்கப் போர் வரை கணித்துள்ளார். அவர் உலகம் 3216 ல் அழிவதாக கணித்துள்ளார். இறுதி அழிவு கங்கைக் கரையில் நடக்கும் என்றும் அதற்கு பின் புதிய மனித இனம் தோன்றும் என்றும்.. அவர்கள் மேம்பட்ட எண்ணத்தோடும் உயர்ந்தவர்களாகவும் வாழ்வார்கள் என கணித்துள்ளார்.

இந்தியாவை குறித்து அவர் பல கணிப்புகளை சொல்லியுள்ளார். ஜான்சி ராணி, நேதாஜி, காந்தியடிகள் என பலரைப் பற்றியும் அவர்கள் ஆற்றும் பணிகள் குறித்தும் சொல்லியுள்ளார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தைவான் விமான விபத்தில் இறப்பார் என்று அவர் சொல்லியுள்ளார். அக்டோபர் 27ல் 2025ம் வருடம் இந்திய தலைவன் முஸ்லீம் நாடுகளின் தலைவனை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவான். அப்போது மூன்றாம் உலகப்போர் முடிவிற்கு வரும். மூன்றாம் உலகப்போரில் பல நாடுகள் அழியும். முஸ்லீம் நாடுகளை ஐரோப்பியர்களால் வெல்ல முடியாத நிலையில் இந்திய தலைவன் அதில் வெற்றி பெறுவான். ஐரோப்பியர்கள் அப்போது வெட்கித் தலைகுனிவர்.

தீய சகுனமுள்ள ஓர் இருண்ட நாளில் ஒரு இந்தியத் தலைவன் பிறப்பான் அவன் நற்குணத்திலும் நிர்வாகத்திலும் மேம்பட்டவனாக இருப்பான். இந்திய கலாசாரத்தை சீரமைப்பதில் தன் ஒவ்வொரு இரத்தத்தையும் செலவழிப்பான். அதுவரை செம்பின் தரத்தில் இருந்த இந்தியாவை கி.பி 2025 பிறகு பொற்காலமாக்குவான். எதிர்காலத்தில் அவனே உலகின் சிறப்புமிக்க தலைவனாக இருப்பான்.

-நாஸ்டர்டாம்ஸ்  என்ற நூலிலிருந்து

Tags:    

Similar News