நாஸடர்டாமின் கணிப்பு : குருவாக உருமாறும் பாரதம்..!
அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து வீழ்கிறது, அந்த நாடுகள் மேலும் வீழும். பாரத தேசம் உயரும்.
அமெரிக்கா வீழப்போகிறது. அதற்கு காரணம் என்ன? அதற்குரிய டேட்டாக்கள் என்ன? அதுக்கு வாய்ப்புகள் இருக்கிறதா? அதற்கு முக்கிய காரணம், நம்மில் பலர் அந்த அமெரிக்காவை சார்ந்து வாழ்கிறார்கள். அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். என்ன காரணங்கள்?
1) நாஸ்டர்டாமின் கணிப்பின்படி இந்தியா வல்லரசு ஆகும். அது 2014 இருந்து தொடங்கும், 2030 ஆசியாவின் மிகப்பெரிய சக்தியாகவும், பின்னர் உலகின் மிகப்பெரிய சக்தியாகவும் மாறும் என்று சொல்லி இருக்கிறார்.
2) உலகவிய ஜோதிடத்தின்படி தற்போது ராகு திசை நடக்கிறது. அது ஒன்றும் இல்லாதவர்களை உச்சத்தில் கொண்டு வைக்கும் வல்லமை பெற்ற கிரகம். எலெக்ட்ரானிக் போன்றவற்றில் உச்சத்தை கொடுத்து மாயையை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவை. அதனால் தான் ராகுவைப்போல கொடுப்பாரும் இல்லை, கேதுவைப்போல கெடுப்பாரும் இல்லை என்கிறார்கள்.
ஆனால் இந்த ராகு என்பது தனது கடைசி காலத்தில் கொடுத்ததை பிடுங்கிக் கொள்வது இயற்கை. அதன்படி, அமெரிக்கா உச்சம் தொட இது மிகவும் முக்கிய காரணம். அந்த திசை இப்போது முடியும் தறுவாயை நோக்கிச் செல்கிறது. அப்போது, அது அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பெரும் வீழ்ச்சியை கொடுக்க வாய்ப்புகள் அதிகம்.
3) அதே சமயம் இந்தியா எப்படி வல்லரசாக மாறும் என்றால், இந்தியா ஒரு போதும் வல்லரசாக மாறாது, மாறவும் முடியாது. ஆனால் அது வல்லரசிற்கும் மேலான உலகின் வசிஷ்ட குருவாக மாறக்கூடிய நிலையே சாத்தியம். உலகின் வழிகாட்டியான இந்தியாவிற்கு சாதகமான குரு திசை அடுத்து வருகிறது. அது வரும்போது இந்தியா ஒளிர்வது மட்டுமல்ல, ஏழை நாடுகள் வளம்பெறும்.
யாரும் கேட்பார் அற்று கிடக்கும் நாடுகள் இந்தியாவின் உதவி பெற்று உயரும். இந்தியாவின் கொள்கைகள் அப்படிப்பட்டதே. நாம் உலகின் 81 நாடுகளுக்கு தடுப்பூசி கொடுத்துள்ளோம். அதில் 47 நாடுகளுக்கு இலவசமாக கொடுத்துள்ளோம். உணவு இல்லாமல் பரிதவித்தபோது, அமெரிக்காவும் கேட்டது. நாம் அவர்களுக்கு காசுக்கு விற்கவில்லை, ஏழை நாடுகளுக்கு இலவசமாக கொடுத்தோம்.
இன்று ஆஃப்ரிக்க நாடுகள் அமெரிக்கா, சீனாவை நம்பி கெட்டது போதும் என்று பாரதத்தை தங்கள் தொழில் கூட்டாளியாக முன்நிறுத்துகிறது. ஏனெனில், இந்தியா நம்மை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய, சீன நாடுகளைப்போல ஏமாற்றாது என்ற நம்பிக்கை ஆப்பிரிக்க நாடுகளிடம் உள்ளது.
அடுத்த குரு திசையில் நேர்மைக்கும், உண்மைக்கும் மதிப்பு கூடும். நல்லவர்கள் உயர்வார்கள். எனவே இந்த குரு திசையில் இந்தியா மட்டுமல்ல உலகமும், நேர்மையும், ஒழுக்கமும் மேம்படும். அதே சமயம் தவறான நாடுகள், கட்சிகள், மனிதர்கள் வீழ்வார்கள்.
4) அமெரிக்கா, சீனா வீழப்போகிறது என்று 8 வருடங்களுக்கு முன்பு சொன்னபோது யாரும் கண்டுகொள்ளவில்லை, அழுத்தி சொன்னபோது சிரித்தார்கள். இன்று கொஞ்சம் பேர் அதற்கு சாத்தியம் உள்ளது என்பதை புரிந்து கொண்டுள்ளார்கள். அதற்கு காரணம் இந்த கொரானாவின் தாக்குதல், அதற்கு பின்னால் வந்த உக்ரைன் போர், ரஷ்யாவின் ஓங்கும் கை, டாலர் மயமழித்தல் ( De Dollarization), இயற்கையின் சீற்றங்களால் ஏற்பட்ட பெரிய பாதிப்புகள், மிக முக்கியமாக பொருளதார வீழ்ச்சி எல்லாம் தவறான நாடுகளையும், அமெரிக்காவிற்கும், அதன் கூட்டாளிகளுக்கும் எதிரான சூழலை நிகழ்த்தி இருக்கிறது. இங்கிலாந்தில் பொருளாதார வசதி இல்லாததால் ஒரு வேளை சாப்பிடுவதில்லை என்ற நிலை உள்ளது. இந்த நிலை இங்கிலாந்திற்கு வரும் என்று 10 வருடதிற்கு முன்னால் யார் சொன்னாலும் நம்புவோமா? இன்று நடக்கிறது.
5) அமெரிக்காவினை போல் ரோடுகள் போன்ற கட்டமைப்புகளை உலகில் எங்கும் அந்த அளவிற்கு பரந்து விரிந்து கிடப்பதை பார்க்க முடியாது. இன்று அந்த கட்டமைப்புகளை புதுப்பிக்க முடியாமல் கடந்த 20 ஆண்டுகளாக தவிக்கிற நிலை மாறி, இப்போது அதை செப்பனிடக்கூட முடியாத ஒரு சூழல் அந்த நாட்டில் நிலவுகிறது. இந்த சூழலில், விலைவாசி உயர்வு, டாலர் மதிப்பிழப்பு எல்லாம் அந்த நாட்டின் வளர்ச்சியை குறைக்கும் என்பதைவிட Collapse எனும் வீழ்ச்சியை தடுக்க முடியாது.
ஏனெனில் அத்தியாவசிய தேவை அங்கே கிடைக்கவில்லை என்றால் மக்கள் கொதித்து எழுவார்கள். அங்கே சீனாவில் அடக்கியது போல அடக்க முடியாது. அவர்கள் சுதந்திரம் கொண்டவர்கள். அதனால் வீதிக்கு வந்து போராடும் நிலை, எல்லாம் வெகு இயல்பாக நடக்க வாய்ப்புகள் உண்டு.
அது மட்டுமல்ல, அந்த நாடு எல்லாம் Systematic ஆக, முறையாக நடந்தால்தான் ஒழுங்காக இருக்கும். நிதிச்சுமையால் அது முடியாமல் போனால் அந்த சிஸ்டமே கொலாப்ஸ் ஆகிவிடும். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும். கோவிட் பிரச்சினை தீவிரமானபோது, நாம் ரயில் பெட்டிகளைக்கூட ஹாஸ்பிடல்களாக மாற்றினோம். அவர்களால் முடியவில்லை, முடியவும் முடியாது. ஏனெனில் அவர்கள் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் வசிக்கும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மாற்று ஒன்றை எளிதாக கொடுத்துவிட முடியாது.
6) இதை தடுக்க வாய்ப்புகள் உண்டா? தடுக்க முடியாது, தள்ளிப்போடலாம். அதற்கு ஒரே வாய்ப்பு பெரிய போர். குறிப்பாக அமெரிக்க- சீனப்போர். அது நடந்தால் சீனாவுடன், ரஷ்யா, வடகொரியா, ஈரான் என்று சில நாடுகள் எதிராக சேர வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த போர் வெற்றி, தோல்வி என்பது இப்போது சாத்தியமில்லை. அப்போது பொருளாதாரத்தில் மோசமான ஒரு சூழலில் இதை தொடரவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது.
2023/24 ல் அணு சக்தி தாக்குதல் அளவிற்கு மிகப்பெரிய அழிவு நடக்க வாய்ப்புகள் இருப்பதாக பல கணிப்புகள் (Predictions) சொல்லுகிறது. அதே சமயம் இன்னும் சில வருடங்களில் உலகில் அணு குண்டுகளை குறைக்க நாடுகள் ஒற்றுமைப்படும். அது ஒரு பெரிய அழிவிற்கு பின்பா, முன்பா என்று தெரியாது.
இது எல்லாம் வீழ்ச்சியை தள்ளிப்போடும் ஒரு தற்காலிக முயற்சியே. அமெரிக்கா தன் கடந்தகால தவறுகளை உணர்ந்து, தன்னை ஒரு நல்ல ஜனநாயக நாடாக மட்டுமல்லாமல், மற்ற நாடுகளின் உரிமையையும், உழைப்பையும் மதிக்கும் நாடாக மாறினால், அதன் வீழ்ச்சியை தவிர்க்கலாம். ஆனால் அதற்கு பின் மற்ற நாடுகள் போல நேர்மையாக உழைக்க வேண்டும். அதற்கு 32 டிரில்லியன் கடன் உள்ளது.
அப்படியெனில் அவர்களின் உழைப்பு எல்லாம் அதற்கு வட்டிகட்டவே போய்விடும். அதை அந்த நாட்டின் மக்கள் செய்யும் சக்தி கொண்டவர்கள். ஆனால் அரசாங்கம் அதற்கு அனுமதிக்குமா? அந்த நாடுதான் உண்மையில் ஒன்றியம் எனும்போது, இந்த சுமையை ஏற்காமல் ஒவ்வொரு நாடும் மீண்டும் தனி ஆவர்த்தனம் செய்யும் நாடாக உடைந்தால்? எனவே, அமெரிக்கா நேர்மையான நாடாக மாறுவது படிப்படியாக உத்தேசிக்கலாம்.
அதை செய்யாவிடில் BigBrother என்ற நிலைமாறி இன்னும் ஏராளமான விஷயங்கள் அமெரிக்காவிற்கு எதிராக மாறிவருகிறது. எனவே அமெரிக்காவின் வீழ்ச்சி என்பது எப்போது வேண்டுமானாலும் நிகழ வாய்ப்பு உண்டு. அதிக பட்சம் இதை தள்ளிப்போடலாம், தவிர்க்க முடியாது.
அதற்கான முதல் சமி்க்ஞை டாலர் வீழ்ச்சி. எனவே அமெரிக்காவில் வசிக்கும் நம் நட்புக்கள், சொந்தங்களை பங்கு வர்த்தகத்தில் இருந்தும், டாலர், ரியல் எஸ்டேட் முதலீட்டில் இருந்தும் பாதுகாப்பாக வெளியே வந்து தங்கம் போன்ற முதலீட்டில் சேமிக்க அறிவுறுத்துங்கள்.
ஏனெனில் இது நடக்காமல் போனால் பிரச்சினையில்லை, ஏனெனில் தங்கம் பாதுகாப்பானது. அதே வேளையில் வருகின்ற குரு தசையில் தங்கம் விலை பெரிய அளவில் உயரும் என்றால் டாலர் வீழ்ச்சியாக வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் இந்தியாவில் செய்யும் முதலீடு உயர வாய்ப்புகள் அதிகம்.
இதற்கெல்லாம் மோடிதான் காரணம் என்று கூறலாம், இல்லை நமக்கு மேலே உள்ளவனின் சித்தம் நமக்கு சுதந்திரம் அடைந்து 69 வருடங்கள் கழித்து மோடியை கொடுத்துள்ளார்!
நன்றி: தகவல் உதவி Indhea