இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியம்: குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பெருமிதம்
இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கு செல்வதற்கு இயற்கையான வாயிலாக வடகிழக்கு பிராந்தியம் அமைந்துள்ளது: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பிற பகுதிகளுக்கு செல்வதற்கு இயற்கையான வாயிலாக வடகிழக்கு பிராந்தியம் அமைந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
விடுதலைப்பெருவிழாவின் ஒரு பகுதியாக அசாம் தலைநகர் குவஹாத்தியில் நடைபெற்ற வடகிழக்கு திருவிழாவின் நிகழ்ச்சியில் அவர் நேற்று உரையாற்றினார். பல்வேறு அண்டை நாடுகளையும், 5300க்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவிலான சர்வதேச எல்லைகளையும், கொண்டதாக வடகிழக்கு பிராந்தியம் அமைந்துள்ளது மகத்துவமானது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்காக வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டிற்கான மத்திய அமைச்சர் வடகிழக்கு மாநிலங்களின் ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மக்கள் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். சுதந்திரப் போராட்டம் குறித்து எடுத்துரைப்பதால் குடிமக்கள் தியாகிகளின் பங்களிப்பு குறித்து நினைவுகூர முடியும். அத்துடன் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், அவர்களுடைய தியாகம் இல்லாமல் பெரிய சுதந்திரப் போராட்டம் நடைபெற்றிருக்காது என்றும் கூறினார். சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை அறிவதன் மூலம் நமக்கு உத்வேகம் ஏற்பட்டு எதிர்காலத்தில் நாட்டை சிறப்பாக கட்டமைக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.