தரையில் உட்கார கிறிஸ்டினுக்கு எந்த தடையும் இல்லை..!
செருப்பு தைப்பவர் முன்னால் உட்கார்வதற்கு அமெரிக்க பெண் கிறிஸ்டினாவுக்கு எந்த தடையும் இருக்கவில்லை.;
செருப்பு தைப்பவர் முன்னால் தரையில் உட்கார்ந்து இருக்கும் கிறிஸ்டின்.
படத்தில் செருப்பு தைப்பவர் முன்னால் தரையில் அமர்ந்து இருக்கும் பெண் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டின். அவர் இந்தியா வந்து புதுடில்லியில் இருந்தபோது, அவரது செருப்பு அறுந்துபோனது. அதனால் ஜன்பத் நடைபாதையில் ஒரு செருப்பு தைப்பவரிடம் செருப்பை கொடுத்தார்.
செருப்பை செருப்பு தைப்பவர் சரிசெய்யும் வரை அவர் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அதனால், சிறிதும் யோசிக்காமல் செருப்பு தைப்பவர் முன்னால் கிறிஸ்டின் தரையில் உட்கார்ந்தார்.
அப்படி உட்கார அவருக்கு எந்த தடையும் இல்லை. ஜாதி, அந்தஸ்து அல்லது இனம் மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரச்னை என்று எதுவும் இல்லை. அதனால் மட்டுமே அவரால் அப்படி உட்கார முடிந்தது.
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்:
இந்தியர்களான நாம் சாதிய கட்டுக்குள் சிக்குண்டு கிடக்கின்றோம். அந்த நம்பிக்கைகளில் உறுதியாகவும் இருக்கிறோம். ஒரு நபரிடம் சாதி, நிறம் மற்றும் சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறோம். செருப்பு தைப்பது அவரது தொழில். ஆனால் அவரும் ஒரு மனிதர். இந்த எண்ணம் எப்படி இந்திய மக்களிடம் காணாமல் போனது?
ஏழையோ அல்லது பணக்காரரோ எவராக இருப்பினும் முதலில் அவர் ஒரு 'மனிதர்' என்ற மரியாதை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்திய பூமி வாழ்வதற்கான இடமாக மாறும்.
இதில் சிறப்பு என்ன தெரியுமா? செருப்புத் தைப்பவர் கிறிஸ்டினாவிடம் இருந்து ஒரு பைசா கூட காசு வாங்கவில்லை. ஏனென்றால், கிறிஸ்டினாவை மரியாதைக்குரியவராக அவர் உணர்ந்தார். ஏன் தெரியுமா? அவர் தனது வேலையைச் செய்யும் போது யாரும் அவருக்கு அருகில் அமர்ந்ததில்லை.
மூலக்கரு : நன்றி Quora -படம் Quora