வயநாடு அதிசயம்..! விலங்குகள் எதுவும் சாகவில்லை..!
வயநாடு நிலச்சரிவில் ஒரு விலங்கின் உடல் கூட மீட்கப்படவில்லை. அப்படியானால் விலங்குகள் ஒன்றுகூட சாகவில்லையா?;
வயநாடு நிலச்சசரிவில் ஒரு விலங்கு கூட சாகவில்லை என்பது உண்மையே.ஒரு விலங்கு கூட சாகவில்லை என வனத்துறையினர் திட்டவட்டமாக கூறுகின்றனர். தாய் குரங்கினை இழந்த இரண்டு குரங்கு குட்டிகள் சகதியில் சிக்கி கட்டிப்பிடித்திருப்பது போன்ற வீடியோக்களும், ஒரு நாய் மண்ணுக்குள் புதைந்திருப்பது போன்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவின. ஆனால் அந்த குரங்கு குட்டிகளும், நாயும் மீட்கப்பட்டு விட்டன. தாய் குரங்கு இயற்கை சீற்றத்தால் பலியாகவில்லை என வனத்துறையினர் விளக்கம் அளிக்கின்றனர். இதற்கு காரணம் இயற்கை சீற்றங்களை பற்றி விலங்குகளுக்கு பேரரறிவு உள்ளது என்பது தான்.
இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:
வயநாடு நிலச் சரிவில் எந்த ஒரு மிருகங்களும் பாதிக்கப்படவில்லை எந்த ஒரு மிருகமும் இறக்க வில்லை என்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக விலங்குகளுக்கு முன்கூட்டியே ஒரு பகுதியில் பூகம்பமோ வெள்ளமோ ஏற்படும் அறிகுறிகள் புரிந்து கொள்ளும் தன்மை உள்ளது என்பதை பலமுறை நாம் நிறைய நிகழ்வுகளில் கண்டுள்ளோம்.
அதேபோல் இந்த நிகழ்விலும் இதுவரை எந்த ஒரு விலங்குகளும் காயப்பட்டதாகவோ இறந்ததாகவோ தகவல் இல்லை. மேலும் வயநாட்டில் நிலசரிவு ஏற்படுவதற்கு முன்பே அந்த பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் அனைத்தும் பாதுகாப்பான இடம் நோக்கி சென்று விட்டன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அந்த பகுதியில் வசிக்கும் நாய்கள் மிகுந்த பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுள்ளது. கட்டி வைக்காத ஆடுகளும் மாடுகளும் தப்பியுள்ளன. இது அதிசயத்திலும் அதிசயமாகும்.
மேலும் ஒரு தகவல் நிலச்சரிவு ஏற்பட்ட கிராமப் பகுதிகளில் அருகே உள்ள வனப்பகுதிகளில் வாழும் குரங்குகள் நிலச்சரிவு ஏற்படுவதற்கு முந்தைய தினம் அந்த பகுதிக்கு தன் கூட்டத்துடன் வந்து அதிக சத்தமிட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. விலங்குகளுக்கு நிலச்சரிவு பூமி அதிர்ச்சி பூகம்பம் ஆகிய பேரழிவை முன்கூட்டியே அறியும் திறன் உள்ளது. ஆனால் பாவம் எல்லாம் தெரிந்த புத்திசாலி பகுத்தறிவு உள்ள மனிதனுக்கு இல்லை. பகுத்தறிவு மனிதனுக்கு வெறும் பூஜ்யம் தான் என்பது கவனிக்கத் தக்கது.