பா.ஜனதா தேசிய தலைவர், சிவராஜ் சிங் சவுகான்?
பா.ஜக.,வின் புதிய தேசிய தலைவராக சிவராஜ்சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளார்.;
பா.ஜனதாவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019-ம் ஆண்டு முதல் பா.ஜனதாவின் தேசிய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.பி.நட்டாவின் பதவிக் காலம் இம்மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அரியானா முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய செயலாளர் வினோத் தாவ்டே பெயர்களும் புதிய தலைவர் தேர்வு செய்வதில் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் 29 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இதற்கு கடுமையாக உழைத்தவர் சிவராஜ் சிங் சவுகான். பா.ஜனதா கட்சி விதிப்படி, கட்சித் தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். 2023 ஜனவரியில் நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி மேலும் ஓராண்டுக்கு பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இதற்கு மேல் நட்டாவிற்கு பதவி நீடிப்பு வழங்க வழியில்லாததால், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த பதவிக்கு சிவராஜ்சிங் சவுகான் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.