பிரதமர் மோடி கிரீஸ் சென்றது ஏன்?
பாரத பிரதமர் மோடி தென்னாப்ரிக்காவில் இருந்து கிளம்பி கிரீஸ் நாட்டுக்கு சென்றிருக்கின்றார்.;
பின்னர் அவர் தாயகம் திரும்பி இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். தென்னாப்ரிக்கா பிரிக்ஸ் மாநாட்டில் மோடி சீன அதிபர் ஷி ஜின்பெங்கை சந்தித்தார். இருவரும் எல்லை பதற்றம் குறித்து பேசினார்கள். விரைவில் படை விலக்கல் செய்யபடுமென இருநாட்டு ஊடகங்களும் செய்தி சொல்லியிருக்கின்றன. அந்த மாநாட்டை வெற்றிகரமாக முடித்தார் மோடி. பிரிக்ஸ் அமைப்பில் இன்னும் சில தென் அமெரிக்க நாடுகள், அரபு நாடுகள் சேர உள்ளன.
அர்ஜென்டினா, சவுதி உள்ளிட்ட நாடுகள் இடம் பெறுகின்றன. இந்தியா இதற்கும் இசைவு தெரிவித்திருக்கின்றது. பிரிக்ஸ் மாநாட்டில் உலகம் அதன் அமைதி மற்றும் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு தென் ஆசியாவின் பங்கு குறித்து பேசிய மோடியின் வார்த்தைகளை உலகம் வரவேற்றது.
அடுத்து மோடி கிரீஸ் நாட்டிற்கு சென்றார். அங்கு ஏன் செல்கின்றார் என்பதுதான் விஷயம். துருக்கி அதிபர் எர்டோகன் நிறைய இந்திய எதிர்ப்பு கொண்டவர். பாகிஸ்தானின் ஆதரவாளர். பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியாக பல உதவிகளும் செய்து வருபவர். அந்த துருக்கிக்கு க்ரீஸ் பெரும் பகைநாடு. இந்த இரண்டு நாடுகளின் மோதலும் உருளலும் உறுமலும் சீறலும் உலக பிரசித்தம். நாங்கள் அலெக்ஸாண்டர் வம்சம் என கிரீஸ் நாட்டினரும், நாங்கள் ஆட்டோமான் வம்சம் என துருக்கி நாட்டினரும் அடிக்கடி தோளை உயர்த்துவார்கள்.
துருக்கியினை கட்டுப்படுத்த இந்தியா அடிக்கடி கிரீஸுடன் "ஹலோ" சொல்ல வேண்டியது அவசியம். பாகிஸ்தானுக்கு நீ வந்தால் துருக்கி எல்லைக்கு நான் வருவேன் என ஜாடை காட்ட வேண்டியது அவசியம் உள்ளது. அதை செய்யத்தான் கிரீஸ் சென்றிருந்தார் பிரதமர் மோடி.