முகேஸ் அம்பானி செய்த வேலைய பாருங்க... அசந்துருவீங்க...!
நீண்டநாள் பணியாற்றிய 15 பேரை கோடீஸ்வரர் ஆக்கினார் தொழிலதிபர் முகேஷ் அம்பானி.;
தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது கம்பெனியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் 15 பேருக்கு 351 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை பரிசாக வழங்கி இருக்கிறார்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது சொத்துகளை பிரித்து மூன்று பிள்ளைகளிடமும் கொடுத்து நிர்வாகம் செய்து வருகிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகத்தை தனது மகள் இஷா அம்பானியிடம் கொடுத்துள்ளார். ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் தற்போது இஷா அம்பானி தலைமையில் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டில் பங்குச்சந்தைக்கு வர இருக்கிறது.
இதே போன்று ரிலையன்ஸ் மொபைல் சேவை நிறுவனமும் விரைவில் பங்குச்சந்தைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் தனது கம்பெனியில் நீண்ட காலமாக தனக்கு விசுவாசமாக இருக்கும் மூத்த அதிகாரிகளை மகிழ்ச்சிபடுத்தும் விதமாக முகேஷ் அம்பானி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் 4417 மில்லியன் பங்குகளை தனது கம்பெனியின் மூத்த நிர்வாகிகள் 15 பேருக்கு பகிர்ந்து கொடுத்துள்ளார். அதன் மதிப்பு ரூ.351 கோடியாகும். ஒரு பங்கின் விலை 796.6 ரூபாயாகும். இதில் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனத்தின் இயக்குனர் சுப்ரமணியத்திற்கும் பரிசு பங்கு கிடைத்திருக்கிறது. அனைவருக்கும் சமமாக பங்குகள் பிரித்து கொடுக்கப்பட்டுளதா அல்லது தகுதி அடிப்படையில் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. சமமாக பிரித்து கொடுக்கப்பட்டு இருந்தால் ஒவ்வொருவருக்கும் 23.40 கோடி மதிப்பிலான பங்குகள் கிடைத்திருக்கும். முகேஷ் அம்பானியின் அறிவிப்பால் 15 பேர் ஒரே நேரத்தில் கோடீஸ்வரர்களாக மாறி இருக்கின்றனர்.
ரிலையஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் பங்குச்சந்தைக்கு வரும் போது 15 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ள பங்குகளின் விலை மேலும் அதிகரிக்கும். இதனால் அவர்களுக்கு 40 கோடி வரை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ரிலையன்ஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் கடந்த ஆண்டில் 2.58 லட்சம் கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளது. இதில் லாபம் மட்டும் ரூ.8875 கோடியாகும். முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது கடந்த ஆண்டில் 26 சதவீதம் லாபம் அதிகரித்து இருக்கிறது.ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் எலட்க்ரானிக்ஸ் பொருள்கள், ஸ்மார்ட்போன்கள், ஆடைகள், உணவு தானியம் உள்பட அனைத்து வகையான பொருள்களையும் விற்பனை செய்கிறது. பிக்பஜார் நிறுவனத்தையும் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் விலைக்கு வாங்கி இருக்கிறது. மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் ரிலையன்ஸ் ஜியோ வேல்டில் திறக்கப்பட்டுள்ள சில்லறை வர்த்தக கடையில் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தங்களை கிளைகளை திறந்துள்ளன. தொடர்ந்து ரிலையன்ஸ் வர்த்தக நிறுவனத்தை இஷா அம்பானியும், முகேஷ் அம்பானியும் விரிவுபடுத்தி வருகின்றனர்.