அரசியலுக்குள் அரசியல் புரியுதா? படிங்க...!
ஒரு அரசு செய்யும் நல்ல திட்டங்களை மறைப்பது மட்டுமன்றி, அவதுாறும் கிளப்பும் அரசியலுக்குள், அரசியல் என்ற புதிய ஸ்டைல் உருவாகி உள்ளது.
யார் என்ன சொன்னாலும் தன் பணியில், தான் தேசபணியில் மிகவும் வேகமாக முன்னெடுத்து செல்லும் அரசாங்கம் என்பதை வார்த்தைகளில் அல்ல செயலில் காட்டுவது மோடி அரசு.
அதன் சாதனைகள் பிரமாண்டமானவை. எல்லைகளிலும் பொருளாதாரத்திலும், பாதுகாப்பு விஷயங்களிலும் அது செய்திருக்கும் சாதனைகளை சாமானியர்கள் புரிந்து கொள்ளவதில் சிரமம் உண்டு
ஆனால் சில பயன்களை நேரடியாக புரிந்துகொள்ள முடியும், அதில் ஒன்று புல்லட் ரயில். இந்த புல்லட் ரயில் என்பது இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு இது அவசியம். அதுவும் பொருளாதார கேந்திரமான நாடுகளுக்கு இது அவசியம்.
சீனா இதில் முன்னணியில் இருக்கும் நாடு. இந்தியாவுக்கு இது அல்லாமல் பொருளாதார வளர்ச்சி மிகபெரிய அளவில் சாத்தியமில்லை. மோடி அரசு இதனை இரு வகையாக கையாள்கின்றது இது சரியானது.
முதலில் மும்பை அகமதாபாத் புல்லட் ரயிலை அறிமுகபடுத்தினார்கள். அது விரைவில் சாத்தியமாகும். அது இன்னும் அகமதாபாத் டெல்லி, டெல்லி காசி என நீளும் திட்டம் உண்டு.
அப்படி ஒரு பக்கம் நடக்கும் போதே தெற்கே சென்னை-பெங்களூர் புல்லட் திட்டத்தை அறிவித்திருக்கின்றது மோடி அரசு. இந்த ரயில் மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்ல கூடியது எனினும் பாதுகாப்புக்காக அது குறைக்கப்பட்டுள்ளது.
இதுவிரைவில் தொடங்கப்படும் அப்போது சென்னையில் இருந்து பெங்களூருக்கான பயண நேரம் 1 மணி அல்லது அதற்கும் குறையும். இது அசாத்தியமானது , நம்பமுடியாதது, அதை நடத்தி காட்டுவது தான் மோடி அரசின் சாதனை.
மிகப் பெரிய புல்லட் ரயில் திட்டம் அறிவிக்கபட்டிருப்பது பற்றி தமிழகத்தில் ஒரு செய்தியுமில்லை ஏன் என்றால் அதுதான் தமிழகத்தின் அரசியல் சக்தி. கவனியுங்கள். இது வடக்கே ஒரு புல்லட் ரயில் திட்டம் நடக்கும் போதே தெற்கே தொடங்கப்படும் திட்டம்.
இது இன்னும் வடமேற்கில் விரிவடையும். அப்படியே திருவனந்தபுரம் ஊடாக தென்னக பொருளாதார கேந்திரங்களை இணைக்கும். 2040களில் டெல்லிக்குச் செல்லும் பயணமே சிலமணி நேரமாக குறையலாம், விமானம் தனி கணக்கு.
சீனா இந்நிலையினை 1990 களுக்கு முன்பே டெங் ஜியோ பிங் காலத்தில் எட்ட தொடங்கியிருந்தது, இந்தியா இப்போது தான் அந்த பெரும் திட்டத்தில் இறங்குகின்றது
மோடி அரசின் இந்த ஆகபட்ச சாதனை சில ஆண்டுகளில் முடுக்கப்படும்போது பெங்களூரும் சென்னையும் போக்குவரத்தால் இணைந்திருக்கும். இதோடு ஐதரபாத் அமராவதி என ஆந்திர பகுதிகளும் இணையும். மாகாண, இன, மொழி சிக்கலையெல்லாம் அது உடைத்து இந்திய உணர்வில் ஒன்றாக்கும். இந்த வளையத்தை சில இணைப்புகள் மூலம் வடக்கே இணைத்து விட்டால் சென்னை டெல்லி என்பது சாதாரண பயணமாகிவிடும்.
மோடியின் ஆட்சி எவ்வளவு பெரும் மாற்றங்களை கொடுத்திருக்கின்றது என்றால் சாதாரணம் அல்ல. ஒரு நாள் அதை உணரும்போது அவருக்கு தேசம் பிரதமர் மோடிக்கும், அவரது அணிக்கும் பெரும் கோயிலே கட்டும்.
இப்படி மாபெரும் திட்டம் அறிவிக்கபட்ட நிலையில் தான் மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தி முடித்திருக்கிறது. நல்ல வேளையாக பழக்க தோஷத்தில் தண்டவாளத்தில் தலைவைக்கவில்லை அதனால் சிக்கல் இல்லை.