பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு

பெண்ணின் திருமண வயதை, தற்போதுள்ள 18 என்பதில் இருந்து, 21 ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.;

Update: 2021-12-16 11:30 GMT
பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு

கோப்பு படம் 

  • whatsapp icon

இந்தியாவில், பெண்ணின் திருமண வயது என்பது தற்போது 18 ஆக உள்ளது. கடந்த சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது பற்றி குறிப்பிட்டிருந்தார்

இதனிடையே, இது தொடர்பாக விவாதிக்க, நிதி ஆயோக் செயற்குழு ஒன்றை அமைத்திருந்தது. ஜெயா ஜேட்லி தலைமையிலான இக்குழுவில், மருத்துவர் வி.கே.பால், சுகாதார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சக உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். அந்த குழு, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்த பரிந்துரை வழங்கியது.

அந்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக, நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு சட்ட வடிவம் பெறும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

Similar News