மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்புகிறது - மாநில அரசு : புதிய அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரத்தின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-03 07:35 GMT

உள்துறை அமைச்சர் அமித் ஷா 

மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரத்தின் தற்போதைய நிலை குறித்து புதிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) மணிப்பூர் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை வரும் ஜூலை 10ம் தேதி அன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

சுருக்கமான விசாரணையின் போது, மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநிலத்தின் இயல்பு நிலை மெதுவாக திரும்பினாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் மேம்பட்டு வருகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் முன்னணி (UPF) மற்றும் குக்கி தேசிய அமைப்பு (KNO) ஆகிய இரண்டு குக்கி அமைப்புகளும் மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 2 இல் சாலைத் தடைகளை விலக்கிக்கொண்ட ஒரு நாளுக்குப்பின்னர் நீதிமன்றத்தில் இது விசாரணைக்கு வந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முறையீட்டைத் தொடர்ந்து, நெடுஞ்சாலையில் இருந்த முற்றுகை உடனடியாக நீக்கப்பட்டதாக, அரசாங்கத்துடனான செயல்பாட்டு ஒப்பந்தங்களை நிறுத்தி கையெழுத்திட்ட முன்னாள் போராளிக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு அமைப்புகளும் ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்தன.

மாநிலத்தில் "அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதில்" உள்துறை அமைச்சர் ஆழ்ந்த அக்கறை காட்டுவதாக அந்த அமைப்புகள் தெரிவித்தன.


எவ்வாறாயினும், இரண்டு மாதங்களுக்கு முன்பு NH-2 இல் சாலை மறியலை அறிவித்த பழங்குடியினர் ஒற்றுமைக்கான குக்கி சிவில் சமூகக் குழு (COTU), இன்னும் அதிகாரப்பூர்வமாக போராட்டத்தை வாபஸ் பெறவில்லை.

மணிப்பூரில் இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன - NH-2 (இம்பால்-திமாபூர்) மற்றும் NH-37 (இம்பால்-ஜிரிபாம்).

மே 3 அன்று மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து NH-2 குக்கி அமைப்புகளால் தடுக்கப்பட்டது. மேலும் மே மாத இறுதியில் அமித் ஷாவின் வருகையைத் தொடர்ந்து தற்காலிகமாக திறக்கப்பட்டது.

மணிப்பூரில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இனக்கலவரத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவீதமான மெய்திஸ் மக்கள் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். மலை மாவட்டங்களில் வசிக்கும் பழங்குடியினரான நாகர்கள் மற்றும் குக்கிகள் 40 சதவீதம் ஆவார்கள்.  

Tags:    

Similar News