Man Sues Restaurant Over Biryani-சிக்கன் இல்லாமல் சிக்கன் பிரியாணியா? சிக்கலில் உணவகம்..!

வாடிக்கையாளரின் 'மன வேதனைக்கு' உணவகம் இழப்பீடு வழங்க நகர நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-12-04 08:39 GMT

Man sues restaurant over biryani-பிரியாணி (கோப்பு படம்)

Man Sues Restaurant Over Biryani, Restaurant in Bengaluru, Chicken Biryani, Consumer Court, Mental Agony, Compensation, Consumer Court Orders Restaurant to Pay Compensation, Bengaluru News

பெங்களூருவில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் இல்லாமல் சிக்கன் பிரியாணி வழங்கியதற்காக நுகர்வோர் அந்த உணவகத்தை நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

அந்த உணவகமானது வாடிக்கையாளருக்கு ஏற்படுத்திய 'மன வேதனைக்கு' இழப்பீடாக ரூ. 1000 மற்றும் ரூ. 150-ஐ திருப்பிச் செலுத்துமாறு நகர நுகர்வோர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

Man Sues Restaurant Over Biryani

அந்த அறிக்கையின்படி, கிருஷ்ணப்பா என்பவர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், வீட்டில் சமையல் எரிவாயு தீர்ந்ததால், தனது மனைவியுடன் உணவகத்திற்குச் சென்றார். தம்பதிகள் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து பார்சலை வீட்டிற்கு எடுத்து சென்றனர். அதைத் திறந்து பார்த்தபோது, ​​அதில் இறைச்சி இல்லாமல் வெறும் பிரியாணி சாதம் வழங்கப்பட்டிருந்தது. உடனடியாக இது குறித்து விசாரிப்பதற்காக உணவகத்திற்கு டயல் செய்தார் கிருஷ்ணப்பா.

சிக்கன் பிரியாணியில் சிக்கன் கொடுக்காதது குறித்து கேட்டபோது, ​​சில நிமிடங்களில் ஆர்டரை மாற்றித் தருவதாக உணவக உரிமையாளர் உறுதியளித்தார். இருப்பினும், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகும் ஆர்டர் மாற்றப்படவில்லை மற்றும் உணவகத்திற்கான அழைப்புகள் கவனிக்கப்படாமல் போனது.

கிருஷ்ணப்பா உணவகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்து சட்டப்பூர்வ ஆவணங்களை அனுப்பினார் ஆனால், உரிமையாளரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பின்னர் அவர் மே மாதம் பெங்களூரு நகர்ப்புற மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகி உணவகத்தின் உரிமையாளர் மீது புகார் அளித்து ரூ.30,000 இழப்பீடு கேட்டார்.

Man Sues Restaurant Over Biryani

கிருஷ்ணப்பா எந்த வழக்கறிஞரையும் நியமிக்காமல், அவரே சொந்தமாக வழக்கை வாதிட்டார். சிக்கன் இல்லாமல் வழங்கப்பட்ட பிரியாணி புகைப்படங்களை அவர் எடுத்து வைத்திருந்தார். அன்றைய தினம் உணவு சமைக்க முடியாமல் தானும் தனது மனைவியும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறினார்.

அவரது வாதத்தை பரிசீலித்த நீதிபதிகள், உணவகம் தெரிந்தோ தெரியாமலோ தவறிழைத்துவிட்டதாகவும், வாடிக்கையாளருக்கு முறையான சேவைகளை வழங்கவில்லை என்றும் கூறியதாக கூறப்படுகிறது. மேலும் வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கவும், பணத்தை திரும்ப வழங்கவும் உத்தரவிட்டது.

Man Sues Restaurant Over Biryani

அந்த உணவகமானது வாடிக்கையாளருக்கு ஏற்படுத்திய 'மன வேதனைக்கு' இழப்பீடாக ரூ. 1000 மற்றும் ரூ. 150-ஐ திருப்பிச் செலுத்துமாறு நகர நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News