மலையாள கலைஞர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவு: தமிழக முதல்வர் இரங்கல்

மலையாள கலைஞர் கே.எஸ். சேதுமாதவன் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-12-24 10:54 GMT

மலையாள கலைஞர் கே.எஸ். சேதுமாதவன்

மலையாள கலைஞர் கே.எஸ். சேதுமாதவன் மறைவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலவர் சுட்டுரையில் கூறியதாவது :

மலையாளத்தின் மாபெரும் எழுத்தாளர்களுடன் இணைந்து பணிபுரிந்த திரைப் படைப்பாளியும், உயரிய பல விருதுகளை வென்ற இயக்குநருமான கே.எஸ். சேதுமாதவன் அவர்கள் மூப்பின் காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வருந்துகிறேன். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர், திரையுலகினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Tags:    

Similar News