Lunar Eclipse 2023 in India Time-சந்திர கிரகணத்தில் கோவிலுக்கு போகலாமா?
இன்று சந்திர கிரகணம் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று நள்ளிரவில் தொடங்கி அதிகாலை 2.22 மணி வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுளளது.
Lunar Eclipse 2023 in India Time, Lunar Eclipse,Solar and Lunar Eclipse,October 28 Lunar Eclipse Time,Lunar Eclipse of October 29 2023,Lunar Eclipse of October 28 2023
2023 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மே 5 ஆம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று வெள்ளிக்கிழமை நடந்தது. இது பகுதி சந்திர கிரகணமாக வந்தது. சந்திர கிரகணம் பவுர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நடைபெறும். ஒரு ஆண்டு மொத்தம் 4 கிரகணம் நடைபெறும். அதில், இரண்டு சந்திர கிரகணம், இரண்டு சூரிய கிரகணம் நிகழும். ஆனால், சோபகிருது ஆண்டில் 3 சூரிய கிரகணமும் 3 சந்திர கிரகணமும் நிகழ்ந்துள்ளது.
அதில் கடைசி சந்திர கிரகணம் இன்று மற்றும் நாளை (அக்டோபர் 28, 29) நிகழவிருக்கிறது.சனிக்கிழமை (அக்டோபர் 28) ஆம் தேதி நள்ளிரவில் சந்திரன் பூமியின் மங்கலான நிழல் வட்டத்தில் நுழைந்தாலும் (பெனம்ப்ரல் சந்திர கிரகணம்), பூமியின் இருண்மையான நிழலில் (அம்ப்ரல் சந்திர கிரகணம்) அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலையில் நுழையும்.
Lunar Eclipse 2023 in India Time
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கிடையில் வரும் நள்ளிரவில் இந்த கிரகணம் இந்தியாவின் அனைத்து இடங்களிலிருந்தும் தெரியும் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்திய நேரப்படி, இந்தியாவில் சந்திர கிரகணம் அக்டோபர் 29ஆம் தேதி 01:06 AM முதல் 02:22 AM வரை இருக்கும். கிரகணம் 1 மணி 19 நிமிடங்கள் நிகழும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதன் சூதக் காலம் 9 மணி நேரம் முன்னதாகவே தொடங்கும்.
சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது ?
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழும். பூமியின் நிழல் சந்திரனின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
Lunar Eclipse 2023 in India Time
சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் வரும் சந்திர கிரகணமும் - பகல் நேரத்தில் வரும் சூரிய கிரகணமும் தான் இந்தியாவில் தெரியும். சந்திர கிரகணம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான ஜோதிட காரணங்கள் பற்றி காணலாம்.
கிரகணம் ஏன் ஏற்படுகிறது?
வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழல்தான் கிரகணம் என கூறுகிறது அறிவியல். சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் உண்டாகிறது. எல்லா அமாவாசை நாளிலும் சூரிய கிரகணம் ஏற்படாது. எல்லா பௌர்ணமி நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். அக்டோபர் 28ஆம் தேதியான இன்று நள்ளிரவில் இந்த சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும்.
Lunar Eclipse 2023 in India Time
சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியுமா?
சூரிய கிரகணத்தைப் போலன்றி சந்திர கிரகணம் பரவலாகத் தென்படும். சந்திர கிரகணம் நிகழும்போது நமது பகுதியில் இரவாக இருந்தால் நம்மால் அதைப் பார்க்க முடியும். இம்முறை சந்திர கிரகணம் நிகழும்போது இந்தியாவில் நள்ளிரவு நேரம், ஆதலால் இந்தியாவில் இது தென்படும்.
மேலும், ‘மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு தென் அமெரிக்கா, வட-கிழக்கு வட அமெரிக்கா, அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியில் கிரகணம் தென்படும்.
ஜோதிட ரீதியாக விளக்கம்
சந்திர கிரகணம் சூரியனுக்கு நேர் எதிராக 180 டிகிரியில் சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ சேரும் போது ஏற்படும். இன்று நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும். அதனால் கிரகண தோஷம் உண்டு. எனவே, கிரகண பரிகாரமாக தங்களால் முடிந்த தானங்கள் செய்யலாம்.
Lunar Eclipse 2023 in India Time
கிரகணத்தின் போது கோவில்கள் மூடப்படும்
பெளர்ணமி அன்று நடைபெறும் சந்திர கிரகணம் இந்தியாவில் தென்படும் என்பதால், இந்த கிரகண தோஷம் இந்தியாவுக்கும் இருக்கும். எனவே, கிரகண நேரத்தில் கோவில்கள் மூடப்படும். எனவே, கோயில்களுக்கு செல்வதை தவிர்க்கவும். வீட்டிலேயே இறைவழிபாட்டு மந்திரங்களை கூறி வழிபடலாம்.