இந்திய அரசியலை புரட்டி போட்ட கர்நாடகா

கர்நாடகா மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னர் உருவாகி உள்ள புதிய சூழ்நிலை இந்திய அரசியலை புரட்டிப் போட்டுள்ளது

Update: 2023-05-18 04:30 GMT

பைல் படம்

பா.ஜ.க., தவிர இதர கட்சிகள் அனைத்தும் முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மை இன மக்களின் ஓட்டுக்களை பெற்றே வெற்றி பெற்று வருகின்றன. முஸ்லிம், கிறிஸ்தவ சிறுபான்மை இன மக்களும் தங்களுக்கு ஆதரவான அரசு மத்தியிலும், மாநிலத்திலும் இருந்தால் போதும் என்ற நினைப்பில் தான் இதுவரை இருந்தனர். கர்நாடகாவின் சூழல் இந்நிலையை மாற்றி உள்ளது.

கர்நாடகாவில் காங்., கட்சி 72 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற நாங்கள் தான் காரணம். எனவே எங்களுக்கு முதல்வர் பதவி அல்லது ஒரு துணை முதல்வர் மற்றும் ஐந்து முக்கிய துறைகளின் அமைச்சர் பதவி வேண்டும் என முஸ்லிம் அமைப்புகள் பிடிவாதமாக கேட்டு வருகின்றன. இங்கு தான் சிக்கலே தொடங்கி உள்ளது.

இதுவரை முஸ்லிம், கிறிஸ்தவ ஒட்டுகளை பெற்று சொகுசாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த அத்தனை கட்சிகளும், இப்போது அவர்கள் அதிகாரத்தையும் கேட்பதால் அதிர்ந்து போய் உள்ளன. எங்களது ஆதரவு வேண்டுமானால், எங்களுக்கு அதிகாரத்தில் பங்கு தாருங்கள். அதிகாரம் இருந்தால் மட்டுமே நாங்கள் நினைத்ததை சாதிக்க முடியும் என அவர்கள் முன் வைத்த கோரிக்கையில் நிச்சயம் நியாயம் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

ஒரு கட்சி வெற்றி பெற பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை கொடுத்தவர்களுக்கு ஏன் ஆட்சியில் பங்கு தரக்கூடாது. அவர்கள் கோரிக்கையில் எந்த தவறும் இல்லையே என அரசியல் விமர்சகர்கள் கூறி உள்ளனர். கர்நாடகாவில் 72 எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற்று கொடுத்து விட்டுத்தான், ஆட்சியில் பங்கு கேட்கின்றனர். இந்த புதிய விழிப்புணர்வு இனி பிற மாநிலங்களிலும் எதிரொலிக்கும்.

அதுவும் எப்படி.தேர்தல் நடப்பதற்கு முன்பே... குறிப்பிட்ட தொகுதிகளில் எங்கள் ஓட்டுகள் அதிகம் உள்ளன. இத்தனை எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றுத்தர நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுக்கு ஆட்சியில் எந்த துறையில் அமைச்சர் பதவி தருவீர்கள் என முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள் நிச்சயம் கேட்பார்கள். அதற்கேற்ப தங்கள் இன வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் எனவும் கேட்பார்கள்.

இதே போன்ற ஒரு சூழல் நிச்சயம் பார்லிமெண்ட் தேர்தலிலும் எதிரொலிக்கும். பார்லிமெண்ட் தேர்தலில் நாங்கள் எத்தனை எம்.பி. க்களை தருகிறோமோ அதற்கேற்ப எங்களுக்கு மத்தியிலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள் செக் வைத்தால் என்ன செய்வது என அத்தனை அரசியல் கட்சிகளும் விழிபிதுங்கி வருகின்றன. இதுவரை முஸ்லிம், கிறிஸ்தவ ஓட்டுக்களை ஒட்டு மொத்தமாக அள்ளிக் குவித்து ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த கட்சிகள் அனைத்தும், இப்போது இந்த சிறுபான்மை இன அமைப்புகள் ஆட்சியில் பங்கு கேட்பதால் தவிக்க தொடங்கி உள்ளன.

கர்நாடகாவில் முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமையும், அவர்கள் அதனை காரணம் காட்டி முன்வைத்த கோரிக்கைகளும் இந்தியா முழுமையும் பரவி, பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அதாவது இனிமேல் முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் ஓட்டுகள் வேண்டுமானால் அவர்களுக்கு அதற்கேற்ப ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என்ற சூழல் உருவாகி உள்ளது. இந்த மனமாற்றம் ஒட்டுமொத்த இந்திய அரசியலில் சிறுபான்மை ஓட்டுக்களை ஏமாற்றியும், பொய் வாக்குறுதிகளை கொடுத்தும் பெற்று, ஆட்சிக்கட்டிலில் சொகுசாக அமர்ந்த கட்சிகளுக்கு பெரும் பேரிடியாக அமைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சிறுபான்மை இன மக்களின் அடுத்து குரல் விரைவில் ஒலிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News