1969ஆண்டு ஜூலை 19- பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கிய நாள்
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வங்கித்துறை திவாலாகிக் கொண்டிருந்தது.இருளில் ஒளிரும் ஒரு விளக்கு போல இருந்தது இம்பீரியல் வங்கி.இப்போது இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா;
வங்கிகளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தேசியமயமாக்கிய நாளின்று
கடந்த 1969 ஆம் ஆண்டு இதே ஜூலை 19 ல் 14 வங்கிகளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தேசியமயமாக்கினார்
1947 – ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, வங்கித்துறை திவாலாகிக் கொண்டிருந்தது. அப்போது, இருளில் ஒளிரும் ஒரே ஒரு விளக்கு போல இருந்தது இம்பீரியல் வங்கி. அதுதான் இப்போது இருக்கும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா. இந்த வங்கி 1955 – ல் தேசியமயமாக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டுக்கு முன்பே சில வங்கிகளோடு சேர்த்து ரிசர்வ் வங்கியும் தேசியமயமாக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்து வந்த ரிசர்வ் வங்கி, இன்று வங்கிகளை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அரசு இயந்திரமாகவும் மாறியுள்ளது.
இந்த நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் பரந்த அளவில் கடன் வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் வங்கிகள் அதனை செய்யாததால், 1961 முதல் 1967 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், 10 லட்சத்து 48 ஆயிரமாக இருந்த வங்கிக் கணக்குகள் 22 ஆயிரமாக குறைந்தன.
இந்த நிலையில் தான், வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியேயும் எழுந்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு, இந்திய அரசின் சோசலிச லட்சியத்தை அடைவதற்காகவே, வங்கிகளை தேசியமயமாக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முடிவு செய்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையிலேயே இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை இந்திரா காந்தி எடுத்தார்.