நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்த செய்ய கோரிய மனு தள்ளுபடி
நடந்து முடிந்த நீட் தேர்வை ரத்து செய்யகோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2021 ஆம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வான நீட்தேர்வு கடந்த செப். 12 ம் தேதி அன்று நாடுமுழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வின் வினாத்தாள்கள் கசிந்ததால், தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஷ்வர ராவ் மற்றும் கவாய் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 5 எஃப்.ஐ.ஆர். பதிவுகளை மட்டும் வைத்து 7.5 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள தேர்வினை ரத்து செய்யப்பட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் மனுதாரருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்து மனுவீன் மீது கடுமையான கண்டனங்களையும் தெரிவித்தனர். பின்னர் அபராதத் தொகையை ரத்து செய்யும்படி கேட்டுக்கொண்டதால், அதை ஏற்றுக்கொண்ட நீதி பதி அபராதத்தை மட்டும் ரத்து செய்தனர்.