ஒரே நாடு ஒரே தேர்தல் : இது நடக்குமா?
2029-க்குள் 'ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறை அமலுக்கு வருமா?
பாஜகவின் இந்த ஆட்சிக் காலம் முடிவடைவதற்குள் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு மத்திய அரசிடம் மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.
இதனிடையே, வரும் 2029-ஆம் ஆண்டு முதல், மக்களவை, மாநில சட்டப் பேரவைகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய சட்ட ஆணையம் மத்திய அரசிடம் விரைவில் தனி பரிந்துரையை வழங்கும் என கூறப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்த கேள்விக்கு பதிலளித்த சிதம்பரம் கூறியதாவது: இதற்கான அரசியல் சட்டத் திருத்தங்களை மக்களவையிலோ அல்லது மாநிலங்களவையிலோ கொண்டு வருவதற்கு தற்போதைய அரசுக்கு பெரும்பான்மை இல்லை.
கடந்த மாதம் தனது சுதந்திர தின உரையில், பிரதமர், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற வலுவான கருத்தை முன்வைத்தார். அடிக்கடி தேர்தல் நடப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையை உருவாக்குகின்றன என்று வாதிட்டார்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பதற்கு அரசியலமைப்பு ரீதியான தடைகள் அதிகம் . அது சாத்தியமில்லை. இண்டியா கூட்டணி, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை முற்றிலும் எதிர்க்கிறது. என்றார்.