சினிமா பாணியில் பேக்கரியில் ஐஸ்கிரீமில் போதை பொருள்
Drug Addiction in India - மணிப்பூரில் பேக்கரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி 'ஐஸ்' போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.;
Drug Addiction in India -ஐஸ்கிரீமில் போதைபொருள் கலந்து விற்கும் காட்சிகளை நாம் பல சினிமா படங்களில் பார்த்திருக்கோம். அதேபோன்ற ஒரு நிஜசம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் நடந்துள்ளது. பேக்கரி மற்றும் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி மதிப்பிலான 'ஐஸ்' போதை பொருளை மணிப்பூர் போலீசார் அதிரடியாக மீட்டு, சம்பந்தப்பட்டவரை கைது செய்தனர்.
மியான்மர் எல்லையில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மணிப்பூர் ரைபிள்ஸ் (எம்ஆர்) படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து மணிப்பூர் ரைபிள்ஸ் படையினர் சோதனை நடத்தினர். அப்போது இம்பாலை சேர்ந்த பிஷ்னு பானிக் (32) என்பவனின் வீட்டில் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான 'ஐஸ்' போதை பொருளை (ஐஸ் கட்டியில் வைத்து தயாரித்து சப்ளை செய்யப்படும் போதை மாத்திரை) கைப்பற்றினர்.
மொத்தம் 5 கிலோ கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்ற போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிஷ்னு பானிக்கை கைது செய்த போலீசார், அவரது பேக்கரியை சோதனையிட்டனர். அங்கும் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தனது கூட்டாளி மூலம் ஐஸ் போதைப்பொருள் வாங்கியதாகவும், அதனை வெளி மாநிலத்திற்கு கடத்திக் கொண்டு போக வைத்து இருந்ததாக பிஷ்ணு பானிக் போலீசில் தெரிவித்தான்.
இவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அசாம் ரைபிள்ஸின் மோரே பட்டாலியன் மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் மேலும் பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.2.23 கோடி மதிப்புள்ள 20,600 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2