இந்தியாவின் தேஜாஸ் MK2 இனி வான்பரப்பை ஆளும்

உலக நாடுகளின் தரத்திற்கு இணையாக இந்தியாவின் சொந்த தயாரிப்பான தேஜாஸ் MK2 போர் விமானம் வான்பரப்பினை ஆளும் வலிமையுடைது;

Update: 2023-06-27 03:30 GMT

பைல் படம்

உலகின் நம்பர் 1 போர் விமானமான F414 என்ஜினை - இந்தியாவில் தயாரிக்க அமெரிக்காவோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவிடம் இல்லாத தொழில்நுட்பம் இது.. ராணுவத்தை பலப்படுத்த  கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம்.

கிட்டதட்ட இந்தியாவுக்கு ₹15ஆயிரம் கோடி அந்நிய செலாவணிகளை சேமிக்கும் ஒப்பந்தம். அதேபோல் இந்திய விமானபடைக்கு யானை பலத்தை கொடுக்கும் ஒப்பந்தம் இது.. கிட்டதட்ட இந்தியாவின் மொத்த தேஜாஸ் போர் விமானங்களையும் - அடுத்த 40 வருடங்களுக்கு பறக்க வைக்கும் என்ஜின் தயாரிப்பு ஒப்பந்தம் இது.

ராக்கெட் என்ஜின் தொழில்நுட்பத்தை விட பல மடங்கு சவால் கொண்டது விமான என்ஜின் தொழில்நுட்பம். செவ்வாய் வரை செல்ல ராக்கெட்டுக்கு என்ஜின் தயாரித்துள்ள நாம் - இன்றுவரை 40 ஆண்டுகள் முயன்றும் நம்மால் ஒற்றை விமான என்ஜினை தயாரிக்க முடியவில்லை என்றால் எத்தனை கடினமான தொழில் நுட்பம் என்று புரிந்து கொள்ளலாம்

அப்படிப்பட்ட தொழில் நுட்பத்தில் உலகின் நம்பர் 1 வரிசையில் உள்ளது GE நிறுவனத்தின் F414 போர் விமானத்தின் என்ஜின். இந்த தொழில்நுட்பத்தோடு (80% ToT)  நமக்கு கிடைத்துள்ளது!. கடந்த 60 ஆண்டுகளில் கிட்டதட்ட ஆயிரக்கணக்கான போர் விமானங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளோம். ஆனால் இதுவரை ஒற்றை என்ஜின் கூட  தயாரிக்க அனுமதி இல்லை - தயாரித்ததும் இல்லை. மொத்தத்தில் ரஷ்யா நம்மை சந்தையாகவே வைத்திருந்தது. அத்தனை ரகசிய மற்றும் பணம் கொழிக்கும் தொழில்நுட்பம் இது.

போர் விமான சர்வீசுக்கு Spare parts கூட ரஷ்யர்களிடமிருந்து தான் வாங்க வேண்டும் - அதனாலேயே மொத்த மிக் & சுகோய் விமானங்களில் 60%  பறக்கமுடியாமல் தரையில் நிற்கின்றன.  இன்று போர் வந்தாலும் 50% சுகோய் விமானங்கள்....அதாவது 320ல் 160 - 170 போர் விமானங்கள் மட்டுமே போரில் ஈடுபட முடியும் - அதிலும் 4 ஆயிரம் மணி நேரத்திற்கு பிறகு முழு என்ஜினையும் மாற்றிட வேண்டும். அந்த அளவுக்கு என்ஜின் தொழில்நுட்பத்தில் அருக பழசு ரஷ்யா. இப்படிப்பட்ட அந்த தொழில்நுட்பத்தையே இதுவரை நமக்கு தரவில்லை.

ஆனால் அமெரிக்க போர் விமானங்கள் அப்படியில்லை. எந்த சூழ்நிலையிலும் 80% போர் விமானம் பறக்கும் வண்ணம் தயாராக இருக்கும் - அதற்கு முழு முழு காரணம் அவர்களது அதிநவீன என்ஜின் தொழில்புட்பம். ஒவ்வொரு என்ஜினும் கிட்டதட்ட 8 - 10 ஆயிரம் மணி நேரம் உழைக்கும். ரஷ்யா என்ஜினை விட இரு மடங்கு நம்பகமாய் நீடித்து உழைக்கும்.

அப்படிப்பட்ட F414 என்ஜினை தாயாரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு தந்துள்ளனர். இதுக்கு முன்னர் தென் கொரியாவுக்கு மட்டுமே தந்துள்ளனர். வேறு யாருக்கும் தந்ததில்லை. இதுவரை அவர்களிடமிருந்து நாம் ஓத்த விமானம் கூட வாங்கியதில்லை - ஆனால் முழுக்க முழுக்க சௌதி ஆயுதங்களை கடந்த 70-80 வருடமாய் அமெரிக்காவிடமிருந்து வாங்குகிறது. ஆனாலும் அவர்களுக்கே கொடுத்ததில்லை இந்த தொழில்நுட்பத்தை.

2008வரை ஒத்த ரூபாய்க்கு நமக்கு எந்த ஆயுதத்தையும் அமெரிக்க கொடுத்ததில்லை. ஆனால் தற்போது 2023ல் 16 ஆயிரம் கோடிக்கு அதிநவீன ஆயுதங்களை( Apache, MQ9, Romeo, P8i, C16 globemaster, C130j Hercules, Chinhook, M777, F404 engine, F414 engine, SIG 716) கொடுத்துள்ளது!

2016ல் தான் இந்தியாவை இராணுவ நட்பு நாடுகள் பட்டியலில் (Military Strategic Partner) ஆக சேர்த்தது. தற்போது அதுக்கும் ஒரு படி மேலே போய் NATOநாடுகளுக்கே கொடுக்காத அங்கீகாரத்தை இந்தியாவுக்கு கொடுக்கிறது. இது சும்மா இல்லை. இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மை - வளர்ச்சி என அனைத்தும் முதற்காரணம்.

தற்போது நாமும் முழு விமானத்தையும் முழுமையாக இந்தியாவில் தயாரிக்க போகிறோம்.விமான என்ஜின் உட்பட. தேஜாஸ் போர் விமானத்திற்காக,  கிட்டதட்ட 20 வருடமாய் அமெரிக்காவிடம் இந்தியா கெஞ்சிய என்ஜின் இது. ஆம் 2000 ஆம் ஆண்டிலிருந்து கேட்டு - 2023ல்  மோடி முடித்துள்ளார்.

இதென்ன அத்தனை முக்கியமா? தற்போது தயாரிப்பிலுள்ள இந்தியாவின் அதிநவீன Tejas MK2 போர் விமானம் பறக்க F414என்ஜின் மிக மிக அவசியம். Tejas Mk1ஐ விட இரு மடங்கு எடை கொண்ட ஏவுகணைகளை சுமந்து கொண்டு - இரு மடங்கு வேகத்தில் பறக்க கூடிய விமானம் இந்த Tejas mk2! சுருக்கமாக சொன்னால் இரண்டு Tejas Mk1 செய்யும் வேலையை இந்த ஒற்றை  விமானம் செய்யும் - அதேவேலையில் ரபேல் & F18க்கு சவால் விடும்! Tejas Mk2 போர் விமானம் - 2026ல் முதல் சோதனை என்ற இலக்கோடு தயாரிப்பு படுவேகத்தில் சென்று கொண்டிருக்கு இது வெற்றி பெற்றால். 2028ல் அடுத்து இந்தியா தயாரிக்க போகும் 5ம் தலைமுறை AMCA விமான தயாரிப்பு திட்டத்துக்கும் இதே என்ஜின் இருக்கும் என்கிறார்கள்.

36 ரபேல் விமானம் என்பது உயிர்க்கு துடிக்கும் நோயாளிக்கு கொடுத்த இரத்ததானம் போல். Emergency Pack!!! 100 வாங்கி இருந்தால்? மொத்த உள்நாட்டு தேஜாஸ் போர் விமான தயாரிப்புக்கும் தேவையான நிதியை மொத்தமாய் உறிஞ்சியிருக்கும். அடுத்த 15 வருடங்களில் மெல்ல மெல்ல ரஷ்யாவின் விமானங்களுக்கு விடை கொடுக்க கொடுக்க - அந்த வெற்றிடத்தை இந்தியாவின் அதிநவீன Tejas Mk1, Tejas MK2, AMCA, Ghatak என அனைத்தும் நிரப்பும்.

அமெரிக்காவின் F18 & F16, பிரான்ஸின் ரபேல், இங்கிலாந்து & ஜெர்மனியின் Typhoonவரிசையில் இந்தியாவின் Tejas MK2 இருக்கும்! ஆனாலும் நாம் செல்ல வேண்டிய உச்சம்  தொட அதிக சவால்கள் காத்திருக்கின்றன

Tags:    

Similar News