இந்தியாவின் ஏவுகணை பலம் தெரிந்து பதுங்கும் நாடுகள்..!
இந்தியா உலகின் மிகவும் பலம் வாய்ந்த வான்பாதுகாப்பு சாதனங்களை நொறுக்கும் பல ரக ஏவுகணைகளை அதிகளவில் வைத்துள்ளது.;
சில நாட்களுக்கு முன் இஸ்ரேல் ஈரானை தாக்கியது எல்லோருக்கும் தெரியும். ஈரான் வைத்திருந்த ரஷ்ய வான் பாதுகாப்பு சாதனத்தை இஸ்ரேலின் ராம்பேஜ் ஏவுகணைகள் அடித்து நொறுக்கி விட்டன. அப்போது கூட இஸ்ரேல் மிகப் பெரிய தாக்குதலை நடத்தாமல் மட்டுபடுத்தபட்ட தாக்குதலை மட்டும் நடத்தி, உங்கள் நாட்டில் எங்களால் எதையும் தாக்க முடியும் என எச்சரிக்கை மட்டும் விடுத்தது.
அதாவது இன்றோடு திருந்துங்கள், இல்லையென்றால் நொறுக்கி விடுவோம் என மிரட்டும் வகையில் சிறிய அளவிலான மிக நுணுக்கமான தாக்குதலை மட்டும் இஸ்ரேல் செய்துள்ளது. அதாவது நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் அதை நீங்கள் விரும்பினால் இருக்க மாட்டீர்கள் எனும் எச்சரிக்கை தெளிவாக பதிவு செய்துள்ளது.
இஸ்ரேல் நினைத்திருந்தால் ஈரானிய முகாம்கள், அதன் ராணுவ தலைமையகம், அதன் அணுவுலைகள் என பலவற்றை தாக்கியிருக்கலாம். ஏன் ஈரான் அதிபர் கோமேனி அலுவலகத்தையே நொறுக்கியிருக்கலாம். அதை செய்யாமல் ஈரானிய அணுவுலைக்கு காவலாய் இருந்த ரஷ்யாவின் வான் பாதுகாப்பு சாதனங்களை மட்டும் அடித்து நொறுக்கி விட்டு வந்து விட்டது.
ஈரானிடம் ரஷ்யா கொடுத்த சில வான்பாதுகாப்பு சாதனங்கள் உண்டு. அவற்றை ஈரானிய அணுவுலை அருகே ஈரான் காவலுக்கு வைத்தது. அதைத்தான் இஸ்ரேலியர்கள் நொறுக்கி விட்டார்கள். சரி பலமான ரஷ்ய ஏவுகணை தடுப்பு சாதனங்களை எப்படி இஸ்ரேல் நொறுக்கியது?
இஸ்ரேலிடம் "ராம்பேஜ்" எனும் மிக பலமான ஏவுகணை உண்டு. அவற்றை ரேடார்களால் கணிக்க முடியாது. இலக்கை குறி வைத்து பட்டனை தட்டி விட்டால் போதும் அது சரியாக இலக்கை தாக்கும் பொய்க்காது. மிக மிக நவீன வழிகாட்டுதல் முறை கொண்ட ஏவுகணை அது.
அதனை விமானத்தில் இருந்து இஸ்ரேலியர்கள் ஏவியிருக்கின்றார்கள். ஈரானால் அதை தடுக்கமுடியவில்லை. அடிவாங்கி கிடக்கின்றது ஈரான்.
இந்த ராம்பேஜ் ஏவுகணைகள் தான் உலகின் இன்றைய மிகப்பெரிய ஆச்சரியம். குட்டிநாடான இஸ்ரேல் அமெரிக்காவுக்கு சமமான ஏவுகணைகளை காட்டி அசத்தி நிற்கின்றது. விஷயம் என்னவென்றால் இந்த ரக அதிநவீன ஏவுகனைகளை இஸ்ரேல், இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிற்கும் கொடுக்கவில்லை.
ஆம், மோடி அரசின் ஒப்பந்தப்படி இந்தியாவின் தேவை அறிந்து அவ்வகை ஏவுகணைகளை இந்தியாவுக்கு இஸ்ரேல் கொடுத்துள்ளது. மோடி ஆட்சியில் எல்லாமே தலைகீழாக மாறியிருக்கிறது. இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் இப்போது உலகம் முழுவதும் வரிசை கட்டி நிற்கின்றன. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை இந்தியா சொந்தமாக தயாரிக்கிறது.
ஒரே ஏவுகணையில் பல இலக்குகளை தாக்கி விட்டு, பத்திரமாக ஏவப்இந்தியா'ஸ் பட்ட இடத்திற்கு திரும்பும் ஏவுகணைகளையும் இந்தியா தயாரித்துள்ளது. இதனை தாண்டி உலகின் வல்லமை வாய்ந்த நாடுகளிடம் இருக்கும் அத்தனை ஏவுகணைகளையும் வாங்கி வைத்துள்ளது. அது போன்ற ஏவுகணைகளை தயாரித்தும் வருகிறது. இதனால் தான் இந்தியாவின் பலம் பலமடங்கு அதிகரித்து, இப்போது அக்கம் பக்கத்தில் உள்ள நாடுகளுக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கின்றது.
சீனா அதிகம் பம்முவதும், பாகிஸ்தான் பதுங்குவதும் இப்படி பலமான இந்தியாவினை கண்டு தான். முன்பெல்லாம் ரஷ்யாவின் ஆயுதமே சீனாவிடமும் இந்தியாவிடமும் இருக்கும். இதனால் இந்தியாவினை எளிதாக நினைத்து சீனா சீண்டிக் கொண்டிருக்கும். பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஆயுதம் கிடைக்கும். அந்த நாடும் இந்தியாவிற்கு சவால் விடும். இப்போது உள்ள இந்தியாவின் பலத்தை கண்டு சீனாவும், பாகிஸ்தானும் பதுங்குகின்றன. அதுதான் மோடியின் மிகப் பெரிய சாதனை.