உலக அளவில் 3ம் இடம் :இந்தியாவில் முதலிடம்..!
தமிழகத்தில் மருத்துவத்தின் தரமும், கட்டுமானமும் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.;
உலக அளவில் மருத்துவத்துறையில் கொடிகட்டிப்பறப்பது இங்கிலாந்து நாடு தான். இந்த நாடு தான் மருத்துவத்துறையில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாடு எழுதிய மருத்துவ டெக்ஸ்ட் புத்தகங்கள் தான் உலகம் முழுவதும் பாடங்களாக உள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை. மருத்துவத்தின் தரம் மற்றும் கட்டமைப்பில் இரண்டாம் இடத்தை அமெரிக்கா பிடித்துள்ளது.
மூன்றாம் இடம் யாருக்கு தெரியுமா? சந்தேகம் இல்லாமல் இந்தியாவிற்குத் தான். இந்தியாவின் மருத்துவத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் மருத்துவத்துறையின் வளர்ச்சி அதிகம் இருந்தாலும் அங்கு மருத்துவத்துறை செலவுகளை கேட்டால், நோயாளிக்கு தலை சுற்றி விடும். ஆனால் இந்தியாவில் உலகத்தரமான சிகிச்சை மிக, மிக குறைந்த செலவில் கிடைக்கிறது. இதனால் தான் உலக அளவில் மருத்துவ சுற்றுலா வளர்ச்சியில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
உலகின் பல நாடுகளின் மருத்துவமனைகள் இங்கிலாந்து, அமெரிக்கா, இந்திய மருத்துவர்களை வைத்தே நடக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் மருத்துவத்தில் பிற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையில், இந்தியா மருத்துவத்துறையில் பிறநாடுகளை சார்ந்திருக்கவில்லை. முழுமையான சுயசார்புடன் உள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் மருத்துவத்துறை மிகவும் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருந்தாலும், தமிழகம் தான் அதில் கொடி கட்டிப்பறக்கிறது. குறிப்பாக தமிழக மருத்துவக்கல்லுாரிகளில் படித்த மாணவர்கள் தான் உலகம் முழுவதும் கொடி கட்டிப்பறக்கிறார்கள். அந்த அளவு மருத்துவத்துறை வளர்ச்சி சிறப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்.பி.பி.எஸ்., இடங்களும் ஒரு இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும், 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3400 எம்.பி.பி.எஸ்., இடங்களும், மூன்று மாநில -தனியார் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிகளில் 450 இடங்களும் உள்ளன. ஆக மொத்தம் தமிழ்நாட்டின் 9050 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதற்கான மருத்துவ மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்க உள்ளன.
அதேபோல் பிடிஎஸ் பல் மருத்துவ படிப்பில் மூன்று அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 250 இடங்களும் 20 தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 1950 இடங்களும் ஆக மொத்தம் 2200 இடங்கள் உள்ளன. இவற்றுள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு எம்பிபிஎஸ் படிப்பில் 851 இடங்களும், பல் மருத்துவப் படிப்பில் 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.