நீண்டதூரம் தாக்கும் பீரங்கி இந்தியா உலக சாதனை
பீரங்கியின் சாதனையை பற்றி தெரிந்துகொள்ளும் முன் போரை பற்றிய அடிப்படை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.;
இந்தியா-பாகிஸ்தான் போர் வருவதாக வைத்துக் கொள்வோம். பாகிஸ்தானின் ராணுவ பலம் மோசமாக இருப்பதால், அது முதலிலேயே அணு ஆயுதத்தால் தாக்க முயற்சிக்கலாம். அதை தடுக்க வேண்டியது மிக முக்கியம். அப்போது அவர்களின் அணு ஆயுதம் உள்ள இடங்களிலும், அதன் ஏவுகணைகள் உள்ள இடத்திலும், அணு ஆயுதத்தை வீச பயன்படுத்தும் போர் விமானங்களையும், அதன் கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பலில் அதன் அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்பதால் அதைத்தான் நாம் முதலில் தாக்குவோம்.
ஆனால் அவை மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருப்பதால், அவர்கள் ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாத நமது மிகவும் பலமான ஏவுகணைகளை, ஐந்தாம் தலை முறை விமானத்தை கொண்டு அவற்றை தாக்குவோம். அவர்களின் அணு ஆயுதம் இந்தியாவை தாக்கினால், அணு ஆயுதங்களால், வாஜ்பாய் சொன்னது போல, பாகிஸ்தான் என்ற நாடே வரைபடத்தில் இல்லாத அளவிற்கு, நமது அணு ஆயுத தாக்குதல்கள் இருக்கும் என்பதால், அவர்களும் நாம் திருப்பி தாக்காமல் இருக்க, நம் அணு ஆயுத கிடங்குகளை தாக்குவார்கள் என்பதால் அதை பாதுகாக்க, நமது ஷீல்ட் சிஸ்டம் மற்றும் விமானப்படை பாதுகாக்கும்.
நாம் முதலில் அணு ஆயுதத்தை பிரயோகிக்க மாட்டோம் என்பதால் நம் அணு ஆயுதம் இருக்கும் இடத்தை பாகிஸ்தானால் தாக்குவது எளிதல்ல, ஆனால் சீனாவால் தாக்க முடியுமல்லவா, அதனால் நம் அணு ஆயுதங்கள் மிகவும் பாதுகாப்பன இடங்கள் மற்றும், கப்பல்களில் இருக்கும்.
ஆனாலும் அவை கூட கண்டு பிடிக்க முடியும் என்பதால், எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத நீர்மூழ்கி கப்பல்களில் அணு ஆயுதத்தை வைத்திருக்கிறோம். மேற்சொன்ன முக்கிய இடங்களை அழித்தபின், நமது போர் விமானங்கள் உள்ளே சென்று தாக்க வேண்டுமெனில், அதன் பாதுகாப்பு வளையமான சீன சிஸ்டத்தை, ரேடார்களை ஏவுகணைகளை, ரேடாரில் கண்ணில் படாத ஐந்தாம் தலை முறை விமானங்களை, ஏவுகணைகளை கொண்டு தாக்குவோம்.
அப்படி தாக்கி அழித்தபின், நமது பழைய பாதுகாப்பு குறைந்த போர் விமானங்களை ஒன்றன்பின் ஒன்றாக, கடைசியாக மிகவும் பாதுகாப்பு குறைந்த மிக் 21 வரை பயன்படுத்துவோம். ஆனால் இவையெல்லாமே முக்கிய, பாதுகாப்பான, நம்மை தாக்கக்கூடிய ஏவுகணைகளை, போர் விமானங்களை கொண்டு எல்லாவற்றையும் அழிக்கவோ, அல்லது அதை கைப்பற்றவோ ஒரு நாட்டால் முடியாது. ஏனெனில் அதற்கு மிக அதிகமான ஆயுதமும், மிக அதிகமான செலவுகளும் ஆகும். எனவே அதை அழிக்க அல்லது கைப்பற்ற, நம் தரைப்படைகளையே பயன்படுத்த வேண்டும்.
அப்படி நம் தரைப்படைகள் செல்லும் போது, அவர்களுக்கு அரண் போன்று தூரத்தில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை பீரங்கி கொண்டு அழிக்க, அவர்களுக்கு முன்னால் நமது பீரங்கிகள் செல்லும். அந்த மூவ்களை, செயற்கை கோள்கள், உளவு விமானம், போன்றவற்றை பயன்படுத்தி, அந்த இடத்தை துரிதமாக கண்டுபிடித்து ஹெலிகாப்டர்கள், பீரங்கிகளை கொண்டு எதிரிகள் தாக்குவார்கள். அதற்கு நாமும் அதே வழியில் திருப்பி தாக்குவோம்.
ஹெலிஹாப்டர்களை பயன்படுத்தி எல்லா பீரங்கிகளை அழிக்கமுடியாது. ஏவுகணை போன்றவற்றை பயன்படுத்தவும் முடியாது. ஏனெனில் அதற்கான செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு பீரங்கிகளைத்தான் பிரதானமாக பயன்படுத்துவார்கள்.
அப்போது அவர்களின் பீரங்கிகளின் தாக்கும் திறன் 30 கிமீ தூரம் என்றால், நமது பீரங்கிகள் தாக்கும் தொலைவு அதைவிட அதிகமாக இருந்தால் தான் எதிரிகளின் பீரங்கிகளை, இராணுவ வீரர்களை பக்கம் திரும்ப விடாமல், நம்மால் அடித்து நொறுக்க முடியும். அதாவது அவர்கள் நம்மை நெருங்கி தாக்குவதற்கு முன்பு நாம் அவர்களை தாக்கி அழிக்க முடியும்.
கடைசியில் நம் ராணுவ விரர்களே போரை முடித்து வைப்பவர்கள். எனவே அதை எளிதாக சொன்னால், எந்த ராக்கெட்டும், வலிமையான விமானமும் இருந்தாலும், போரில் வெற்றியை முடிவு செய்வது தரைப்படையே. அதற்கு அரணாக இருப்பது பீரங்கியே.
அமெரிக்காவின் M777 Towed Howitzer 40km range தான் அதிகதூர தாக்கும் திறன் கொண்டதாக இருந்தது. அந்த சாதனையை கடந்து 48 கிமீ தூரம் சென்று தக்கக்கூடிய பீரங்கியை, அதுவும் எளிதாக இழுத்து அல்லது எடுத்து செல்லும் வகையில் தயாரிக்கப்பட்ட ATAGS (Advanced Towed Artillery Gun System) என்ற பீரங்கியை இந்தியா தயாரித்துள்ளது.
இதுபோன்ற பீரங்கிகள் விலை, ஆபரேஷனல் ஈஸினஸ், அதன் செல்வு அதிகம் போன்ற சாதகமில்லாததால் அவற்றை முற்றிலும் பயன்படுத்த இயலவில்லை. மேலும் பீரங்கிகள் தானாக இயக்கும் மிக பலமான எஞ்சின்களோடு இருந்ததால், அதன் எடை மிக அதிகம். அப்படியெனில் கார்கில் போன்ற போரில், மலை முகடுகளுக்கு கொண்டு செல்ல முடியாததால், நாம் இழுத்து (Tow) சென்று பயன்படுத்தும் போபோர்ஸ் வகை பீரங்கி மிகவும் சாதகமாக இருந்தது.
மேலும் அதில் எஞ்சின் தனியாக இருந்ததால், அதன் விலை குறைவாக இருந்தது. அதை அழித்தால் கூட இழப்பு குறைவாக இருந்தது. இப்படி பல பிரச்சினைகள், பிராக்டிகல் டிஃபிகல்டிஸிஸ் எல்லாம் களைந்து, இந்தியா கண்டுபிடித்த ATAGS டேங்குகள் மிகச்சிறப்பானதாக இருப்பதால், அது உலக சாதனையாகி விட்டது.
இந்த நிலையில் அடுத்த 60 கிமீ, 120 கிமீ தூரம் திறனுள்ள பீரங்கியை வடிவமைத்துக் கொண்டுள்ளது இந்தியா. எனவே வருங்காலத்தில் உலகின் பீரங்கி தேவையை இந்தியா சார்புடையதாக அடுத்த 8 வருடங்களில் மாற்ற முடியும் என்கிறார்கள் உலக ஆயுத கொள்முதல் சார்பு வல்லுனர்கள்.
ஏற்கனவே சொன்னதுபோல காலாட்படையில் எந்த படைக்கு தூரமாக தாக்கும் திறன் இருக்கிறதோ, அதற்கு எதிரிகளை அழிக்கும் திறன் அதிகம் என்பதால் போரின் போக்கையே தரைப்படை மாற்றி அமைத்து விடும்.
குறிப்பாக இந்த வகை பீரங்கிகளை கொண்டு தான், ரஷ்யாவின் வெற்றியை உக்ரைன் தடுத்துக் கொண்டே வருகிறது. இந்த பீரங்கிகளுக்கு உலகெங்கும் கடும் கிராக்கி இருப்பதால், அதன் ஆர்டருக்காக நீண்ட நாள் காத்திருக்க வேண்டிய சூழலும் உள்ளது. காரணம் இந்திய படைகளின் தேவையை நிறைவு செய்யவே பல ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள்.
பீரங்கியில் என்ன தான் மாடர்ன் டெக்னாலஜி என்று சொன்னாலும், அதன் குண்டுகள் எவ்வளவு தூரம் செல்கிறது, அதில் அக்யூரசி என்ன என்பது தான் அதன் செயல் திறனை நிர்ணயிக்கிறது. அதற்கு காரணம் இதுவரை உலகின் பல்வேறு போர்களில் பயன்படுத்தப்பட்டு வரும், உலகின் மிகச்சிறந்த பீரங்கிகளின் விலை மட்டுமல்ல, அதன் குண்டுகள் ஒவ்வொன்றின் விலை 2 லட்சம் ரூபாய் முதல் (ராக்கெட் அஸிஸ்டட் குண்டுகள்) 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும். இதனால் தான் போர் வந்தாலே நாடுகளின் பொருளாதாரம் படுத்து விடுகிறது.
ஆனால் இந்தியாவின் தயாரிப்பு, பீரங்கியின் விலை மட்டுமல்ல, குண்டுகளின். விலையும் குறைவாக இருப்பதால், அதற்கான பெரிய மார்க்கெட் உருவாகி வருகிறது. போரின் போது உக்ரைன் நாள்தோறும் 10,000 பீரங்கி குண்டுகளை ரஷ்யாவிற்கு எதிராக பயன்படுத்தியது, அதை நெருங்க விடாமல் சமாளித்தது என்றால், அதற்கே கிட்டத்தட்ட தினமும் 500 கோடி தேவைப்பட்டது. அப்படியெனில் அந்த நாட்டின் நிதி நிலைமை என்னவாகியிருக்கும்?
அப்படியெனில் விலை குறைவான பீரங்கிகளை விற்பது என்பது சிறந்த ஒரு வாய்ப்பு அதுவும் ஒரு முறை பீரங்கியை விற்று விட்டு, அதற்கு தொடர்ந்து பயன்படுத்த நாம் விற்கின்ற குண்டுகள் என்பது நமக்கு தொடர் வருமானத்தை கொடுப்பவை. அப்படியெனில் இந்தியாவின் வருமானம் வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்!
அதை இன்னும் சிறப்பாக செய்யும் திறனும். தொழிலாளர்களும் இருப்பது தமிழகத்தில் தான். அதுவும் குறிப்பாக கோவை அருகில் தான். ஆனால் அரசியல் காரணங்களுக்காக 8 வழிச்சாலையை தடுத்ததன் மூலம் இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டிற்கு வரவேண்டியது வடக்கே போய்விட்டது என்பதையும் கவனிக்க வேண்டும்.