இந்தியா கட்டிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் சிறப்பு..!
இந்தியா உருவாக்கிய இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் என்ன சிறப்பு உள்ளது என பார்க்கலாம்.;
இந்தியா தன் இரண்டாம் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் "ஐ.என்.எஸ். அரிகாட்" எனும் நவீன கப்பலை நேற்று ராணுவத்தில் சேர்த்திருக்கின்றது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் அதனை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ஏற்கனவே "அர்கண்ட்" எனும் அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி இந்தியாவிடம் உண்டு. அவ்வகையில் இது இரண்டாம் நீர்மூழ்கி கப்பல். இன்னும் பல கப்பல்கள் இதே ரகத்தில் தயாரிக்கபட்டு வருகின்றன. இது இந்தியாவின் விசாகபட்டினத்தில் தயாரிக்கப்பட்ட சொந்த தயாரிப்பு. நாற்பத்து மூவாயிரம் கோடி செலவில் கட்டபட்டுள்ளது.
நீர்மூழ்கியில் டீசல் ரகம் கொஞ்சம் சவாலானது. அது எழுப்பும் சத்தம் மற்றும் அடிக்கடி கடலுக்கு மேல் வர வேண்டிய தேவை என அதன் சிக்கல்கள் அதிகம். அணுசக்தியில் இயக்கும் நீர்மூழ்கியில் சத்தம் பூஜ்ஜியம். மாதக்கணக்கில் நீருக்குள் மறைந்திருக்கும் சக்தி என அதன் வீச்சும் சக்தியும் அதிகம்.
இந்த நீர்மூழ்கியில் இருந்து கே 15, ரக ஏவுகணைகளை சுமார் ஆயிரம் கி.மீ., தொலைவுக்கு வீசமுடியும். இதனால் உலகின் எந்த துறைமுக நகரையும் தாக்கும் சக்தியினை இந்தியா பெற்றிருக்கின்றது. இதனால் இந்திய கடற்படை கூடுதல் வலிமை பெற்றிருக்கின்றது.
இது மாபெரும் செலவு பிடிக்கும் விஷயம். வல்லரசுகளுக்கு சாத்தியமான அந்த செலவை இந்தியாவும் செய்து இதனை சாதித்திருக்கின்றது. இதன் மூலம் தேசம் சிறந்த காவலை பெற்றிருக்கின்றது.
கவனியுங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழித்து இந்த கலன் கட்டபட்டுள்ளது. இப்படியான கப்பல்களை உருவாக்காமல் நாட்டிற்கு முழுமையான ஒரு பாதுகாப்பினை பெற முடியாது. சீனாவிடமோ பாகிஸ்தானிடமோ தேசம் அஞ்சி நடுங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இப்போது ஒவ்வொரு நாள் விடியும் போதும், தேசத்தின் பாதுகாப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நொடிக்கு நொடி தேசப்பாதுகாப்பில் இந்தியா முன்னேறிக்கொண்டிருப்பதை கண்டு உலகமே வியந்து கொண்டிருக்கிறது. 145 கோடி மக்களை எப்படி பாதுகாக்க தேசம் பெரும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் செல்ல வேண்டிய துாரமும் அதிகம். இந்த துாரம் இந்தியா தனக்கு தானே நிர்ணயித்துக் கொண்ட ஒரு இலக்கு. இந்த இலக்கினை மோடியின் ஆட்சிக்காலத்திலேயே இந்தியா எட்டி விடும் என்பது தான் பெருமைக்குரிய விஷயம்.