செங்கடலில் அதிரடி காட்டிய இந்திய கப்பற்படை..!
இந்திய காவல் படையின் பலம் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இம்முறையும் வாய்ப்பு கொடுத்தது ஹவுத்தி அமைப்பு. செங்கடலில் சென்ற கப்பல் ஒன்றை ஹவுத்திகள் மிக அபாயமாக தாக்க முயன்றனர். அதை இந்திய காவல் படையினர் முறியடித்திருக்கின்றனர்.
இப்போதெல்லாம் வானில் மட்டுமல்ல கடலிலும் ஆளில்லா தாக்குதல்கள் பெருகி விட்டன. ஒரு படகில் வெடிபொருள் நிரப்பி கப்பலை மோத செய்வது அதிகரித்து விட்டது. அப்படி எண்ணெய் கப்பலை தாக்க அனுப்பட்ட வெடிகுண்டு படகை இந்திய வீரர்கள் சுட்டு வெடிக்க வைத்து கப்பலை காப்பாற்றினார்கள்.
இந்த நவடிக்கையினை செய்ய அவர்கள் எடுத்துகொண்ட நேரம் 14 நிமிடம். இந்த வகை தாக்குதல்கள் அபாயமானவை. ரஷ்ய கப்பல்கள் இப்படித்தான் உக்ரைனால் மூழ்கடிக்கப்பட்டன. அதாவது ரஷ்ய படைகளே எதிர்கொள்ளத் தயங்கும் தாக்குதல் இது. அப்படியான தாக்குதலை இந்திய காவல் படைகள் அனாயசமாக செய்திருக்கின்றன. கொஞ்சமும் பதற்றமில்லாமல் படகு தாக்குதல் வீச்சுக்குள் வரும் வரை காத்திருந்து துல்லியமாக தாக்கியிருக்கின்றனர்.
இந்திய படைகள் இப்படியெல்லாம் பயிற்சி பெற்றிருப்பதும் அசாதாரணமான தாக்குதல்களை எளிதாக செய்வதும், உலகளவில் ஒரே ஒரு விஷயத்தைத்தான் சொல்ல வைக்கின்றன. "இது மோடியின் இந்தியா... இங்கு எதுவும் அதிசயமல்ல".
ஆம், இந்தியா பழைய இந்தியா அல்ல எல்லா வகையிலும் பலமான இந்தியாவாக உருவாகி விட்ட இந்தியா என்பதை காட்சிகள் காட்டுகின்றன.