Indian culture-இந்திய கலாசாரம் சொல்லும் கதை..! அவசியம் அறியணும்..!

இந்திய கலாசாரம் என்பது யாரும் திட்டமிட்டு வடிவமைத்த இலக்கிய நூல் அல்ல. அது இரத்தச்செல்களில் பிணைந்திருக்கும் பண்பு.;

Update: 2023-09-18 06:18 GMT

Indian culture-பெரியோருக்கு செய்யும் மரியாதை (கோப்பு படம்)

Indian culture,Famous Indian culture, UK Prime Minister Rishi Sunak

பொதுவாகவே இந்திய கலாசாரம் போற்றுதலுக்குரியது. அது வெறும் கலாசாரம் மட்டுமல்ல. அது வாழ்க்கை. தாய்மையை மதித்தல், சகோதரத்துவம் பேணுதல், பெரியவர்களை மதித்தல் போன்றவை இந்தியர் பிறப்பில் இரத்தத்தோடு வருபவை. அது யாரும் சொல்லிக்கொடுத்து வளர்வது அல்ல. தானே வந்தவை.

பெற்றோர் பெரியவர்களுக்கு மரியாதை தருவதை பிள்ளைகள் பார்க்கிறார்கள். பிள்ளைகளும் பெரியவர்களை மதிக்கக் கற்றுக்கொள்கின்றனர். இது வாழையடி வாழையாக தொடர்கிறது.

இதற்கு சமீபத்தில் நடந்த ஒரு அருமையான உதாரணம் ஒன்றை உங்களுக்கு பகிர்வதில் பெருமை அடைகிறோம்.

Indian culture,Famous Indian culture, UK Prime Minister Rishi Sunak

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் குடும்பம் அவர் பிறப்பதற்கு முன்னரே இங்கிலாந்தில் குடியேறிவிட்டனர். ரிஷி இங்கிலாந்தில் பிறந்தவர். இருப்பினும், இந்திய கலாசாரம் அவரது இரத்தத்தில் ஊறியது என்பதை நிரூபிக்கும் காட்சி சமீபத்தில் நடந்தது.

G20 உச்சிமாநாடு 

புது தில்லியில் G20 உச்சிமாநாட்டின் போது இங்கிலாந்து பிரதமர் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தபோது நடந்த மிகவும் அழகான, நெகிழ்ச்சிமிகு தருணம். ரிஷி சுனக் ஏறக்குறைய 7000 கோடி சொத்துக்களுக்குச் சொந்தக்காரர். தற்போது அவர் ஒரு வளர்ந்த நாடான இங்கிலாந்து நாட்டின் பிரதமராகவும் இருக்கிறார். ஆனால், என்னதான் செல்வமும் மற்றும் அதிகாரமும் இருந்தாலும் கூட அவரது அணுகுமுறையில் எந்த கர்வமும் இல்லை. மூத்த பெண்மணியான வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் பேசும்போது மண்டியிட்டு பேசுகிறார்.


மூத்தவர்களை எப்போதும் மதிக்கும் இந்திய கலாசார மகத்துவத்தின் வெளிப்பாடுதான் நீங்கள் இந்த படத்தில் பார்ப்பது.

Indian culture,Famous Indian culture, UK Prime Minister Rishi Sunak

ஆனால், அதே பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது ஒரு கவர்னர் ஜெனரல் தனது மனிதாபிமானமற்ற செயலை செய்வதையும் படத்தில் காண்கிறீர்கள்.


பிரிட்டிஷ் ஜெனரலின் கால்களைத் தொட்டு சேவை செய்யும் இந்தியர் அவர் முன் தரையில் அமர்ந்திருக்கிறார். மனிதாபிமானம் இல்லாமல் ஒரு இந்தியரின் மடியில் காலைத்தூக்கி வைத்து, அவர் பத்திரிக்கை ஒன்றில் ஆழ்ந்திருக்கிறார். இன்னொரு இந்தியர் அவருக்கு விசிறி விடுகிறார். ஏனென்றால், அந்த காலகட்டத்தில் அவர்களிடம் அதிகாரம் மற்றும் செல்வம் இரண்டும் இருந்தன. ஆனால் மனிதகுலத்திற்கு மரியாதை மட்டும் இல்லை, குறிப்பாக இந்தியர்களுக்கு.

இன்று, இந்தியர்கள் மற்றவர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதை இந்த ஆங்கிலேயர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இன்று இந்திய வம்சாவளி ஒருவரே அவர்களை ஆள்கின்ற நிலை வந்துள்ளது. 

மூலம்: Quora 

Tags:    

Similar News