ஏவுகணையின் ராஜாவான இந்தியா

ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா பல்வேறு உலக நாடுகள் ஆச்சர்யப்படும் அளவு வளர்ந்து நிற்கிறது.

Update: 2023-05-03 17:30 GMT

பைல் படம்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியம் மீண்டும் இதுகுறித்து தெளிவுபடுத்தி உள்ளார். மிகவும் கவனமாக வார்த்தைகளை உதிர்க்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதே கருத்தை கடந்த மூன்று ஆண்டில் பலமுறை கூறி விட்டார். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. சீனா பிற நாடுகளின் எல்லையில் படைகளை குவிக்கும். பின்னர் அந்த நாட்டு எல்லையில் எந்த பதட்டமும் இல்லை என்பது போல் ஒரு சூழலை உருவாக்கி, அந்த நாட்டை ஏமாற்றி அந்நாட்டு எல்லைக்குள் மெல்ல, மெல்ல நகரும். இதுவரை உலக அளவில் சீனா இந்த தந்திரத்தை தான் மேற்கொண்டு வருகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய- சீனா படைகள் நேருக்கு நேர் ஒருவரை ஒருவர் நோக்கி துப்பாக்கியை காட்டியபடி நிற்கும் நிலையில், சீனா இந்திய எல்லையில் பதட்டம் ஏதும் இல்லை. சீனா இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புகிறது என அடிக்கடி ஒரு அறிக்கை வெளியிடுகிறது. இதனை தான் சீனா பொய் சொல்கிறது. உண்மையில் இந்திய- சீனா எல்லை பதட்டமான நிலையில் உள்ளது. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என நம் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளிப்படையாக அறிவித்து வருகிறார்.

இப்போது உலக நாடுகள் முழுக்க இந்திய சீன எல்லை நிலவரத்தை கவனிக்கின்றன. இதில் சீனாவின் வம்பு குறித்து உலக நாடுகள் பலவும் சீனாவை கண்டித்து வருகின்றன. அதேசமயம், சீனாவை அடித்து நொறுக்க தயாராகும் இந்தியாவின் வேகத்தை கண்டு ஆச்சர்யத்துடன் கண்களை விரிக்கின்றன.

இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா பெயர் சூட்டிய மறுநாளே, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருணாச்சலம் சென்று, இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி அருணாச்சலம். எங்கள் நிலத்தின் ஒரு சிறு துளியை கூட உன்னால் தொட முடியாது என சீனாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து பேசினார். இதனால் சீனா உறக்கம் இல்லாமல் தவிக்கிறது.

சீனா எந்த நாடகம் நடத்தினாலும், இந்தியா அதிரடியாக அடுத்த நொடியில் பதிலடி கொடுக்கிறது. அமித்ஷா அருணாச்சல பிரதேசத்திற்கு சென்று வந்த மறுநாளே இந்தியா வங்க கடலில் இருந்து பாலிஸ்டிக் மிஸைல்களை இடைமறித்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கூட இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை துல்லியமாக வானிலேயே அழித்து விடும். இந்த சோதனையை தான் இந்தியா செய்துள்ளது. இந்தியா சத்தம் இல்லாமல் ஆகச் சிறந்த இடைமறிப்பு பாலிஸ்டிக் மிஸைல்களை உருவாக்கியிருப்பது மட்டுமல்லாமல் சிறந்த ஹைப்பர் சானிக் இடைமறிப்பு கிளைடர் சாதனங்களையும் உருவாக்கியிருக்கக்கூடும் என சீனா உள்ளிட்ட உலக நாடுகள் கணித்துள்ளன.

உலக அளவில் ஹைப்பர் சானிக் சாதனங்கள் என்பது ஓர் கனவு திட்டம் தான்.ஓரிரு நாடுகளுக்கு மட்டும் பலித்த கனவு இது. அந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் இந்தியா சோதனை அடிப்படையில் ஒரு நாள் மாலை வேளையில் பங்களாதேஷ் எல்லையை கடந்து பூடான் வான் பகுதியில் ஏவுகணை ஒன்றை செலுத்தி சோதித்தது. இதன் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வந்தன. அதேபோன்று தான் வங்கக் கடலில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையும் அமைந்தது.

இது தவிர இந்தியா காஷ்மீர் மாநில எல்லை பகுதிகளில் பல சுரங்கங்களை போர்க்கால அடிப்படையில் புதிது புதிதாக அமைத்துக் கொண்டு வருகிறார்கள். இங்கெல்லாம் குறுகிய, நீண்ட துார ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தானை நேரிடையாக.... தன்னந்தனியாக ஒரே நேரத்தில் சம்ஹாரம் செய்யும் அளவு இந்தியா வளர்ந்து நிற்கிறது. இன்றைய நவீன உலகில் ஏவுகணைகளின் ராஜா இந்தியா என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.

சீனாவின் அதிநவீன DF சீரிஸ் அதாவது டாங்பெங் ஏவுகணைகள் வரிசை அத்தனைக்கும் மாற்றாக நம் இந்திய ஏவுகணைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சந்தேகமே இல்லாமல், ஏவுகணை பலத்தில் சீனா, பாக்கிஸ்தானை விட பல மடங்கு இந்தியா வளர்ந்து நிற்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. 

Tags:    

Similar News