ஆயுதச்சந்தையை புரட்டி போட்ட உக்ரைன் போர்: இந்தியாவுக்கு சாதகமா?

உக்ரைன் போர் காரணமாக உலகின் ஆயுத சந்தையில் தலைகீழ் மாற்றங்கள் நடக்கின்றன.

Update: 2023-04-01 02:45 GMT

உலகின் ஆயுத சந்தையில் சுமார் 20 சதவீதத்துக்கு மேல் கைவசம் வைத்திருந்த நாடு ரஷ்யா. உக்ரைன் போருக்கு முன் ஐரோப்பிய நாடுகள் பெருமளவு ஆயுதம் குவிக்கவில்லை, வெடிபொருளும் முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. இப்பொழுது ரஷ்யா அடுத்து தங்களை தாக்கலாம் எனும் வகையில் ஆயுதங்களை குவிக்கின்றார்கள்.

பொதுவாக ஆயுதங்களோ சாதனங்களோ ஒரே இரவில் செய்யகூடியவை அல்ல, விமானங்களும் கப்பல்களும் ஆண்டுகணக்கில் எடுக்கப்பட்டு உருவாக்கபடுபவை, இதனால் உலகில் ஒரு குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது.

அமெரிக்காவின் ஆயுத வர்த்தகம் அடுத்த 10 ஆண்டுக்கு பெரும் அளவுக்கு முன்பதிவு பெற்றிருக்கின்றது, ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பு என கவனம் செலுத்துகின்றன.

ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுத்தப்பட்டு புதிய ஒப்பந்தம் ஏதும் இல்லை எனும் வகையில் அதன் பிரதான இறக்குமதி நாடு சீனாவும் இதர நாடுகளும் திகைக்கின்றன. சீனா இதனால் நான்கு பிரதமர்களை ராணுவ துறையில் இருந்தே நியமித்துள்ளது, அதாவது இனி சீனாதான் அவர்களுக்கான எல்லாமும் செய்ய வேண்டும் ரஷ்யா கொஞ்ச வருடங்களுக்கு ஏதும் விற்கும் நிலையில் இல்லை

இப்படி ஒவ்வொரு நாடும் பரிதவித்து அல்லது போர் என வந்தால் என்ன செய்வது, இனி நமக்கு யார் ஆயுதம் தருவது என தவிக்கும் நிலையில் இந்தியா அசத்துகின்றது

மோடியின் மிக அசத்தலான "மேக் இன் இந்தியா" திட்டம் கைகொடுத்து நாட்டை காக்கின்றது. இந்தியா அதற்கான ராணுவ சாதனங்களை தானே தயாரிக்கும், சில சிரமமான தொழில்நுட்பங்களை மட்டும் மேல் நாடுகள் கொடுத்தால் போதும். இப்பொழுது மேலை நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியா மேல் ஒரு பார்வை விழுகின்றது. அது இந்தியாவில் தங்கள் ராணுவ சாதனங்களை தயாரித்தால் என்ன என்பது?

மேலை நாடுகளில் ஆட்களுக்கு சிரமம், கூலியும் அதிகம் அதே நேரம் இப்பொழுது அவர்களுக்கு தேவை அவசர ஆயுதம். அவ்வகையில் இந்தியா அவர்களின் கண்களுக்கு மிக சிறந்த நாடாகப்படுகின்றது, பல பேச்சுவார்த்தைகள் நடக்க இருக்கின்றன.

ஆக உலக அரங்கில் மிகபெரிய ஆயுத ஏற்றுமதி நாடாக இந்தியாவினை நிறுத்த தொடங்கியிருக்கின்றார் மோடி, இன்னும் சில ஆண்டுகளில் உலகின் மிகபெரும் சதவீத எண்ணிக்கை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களாகவே இருக்கும். உலகின் சக்திவாய்ந்த ராணுவ சாதன ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுக்க தொடங்கியிருக்கின்றது.

Tags:    

Similar News