'சந்திரயான் 3-க்கு டாடா செய்த உதவி
‘சந்திரயான் 3 -வெற்றியின் மூலம் வல்லரசு நாடுகளை இந்தியா திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சந்திரயான் 3 திட்டத்துக்கு டாடா நிறுவனம் உதவி செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. டாடா குழுமத்தின் Tata Consulting Engineers Limited 'சந்திரயான் 3' ராக்கெட்டில் பொருத்தப்பட்ட கிரிட்டிக்கல் சிஸ்டம்ஸ் மற்றும் சம் சிஸ்டம்ஸ், வாகன அசம்பிளி பில்டிங்கையும் தயாரித்து கொடுத்துள்ளது.
மேலும் உலகத்தை அச்சுறுத்திய பெரும் தொற்றுநோயான கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி தயாரிக்க, யாரும் முன் வராத நேரத்தில் ஏறத்தாழ 4000 கோடிருபாயை கொடுத்த மகான் இந்த ரத்தன் டாடா. நம்மக்களை காக்க உதவிய டாடா இன்று நம் சந்திரயானுக்கும் தொழில்நுட்ப பாகங்களை தயாரித்து வழங்கியது அத்தனை பேரையும் பெருமை கொள்ளச் செய்துள்ளது.
இதோடு டாடா நிறுவனம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பையும், அரசுக்கு பெரும் வரிவருவாயை கொடுக்கிறது. பெருமை கொள்ளுங்கள். நல்லோருக்கு ஒரு வேண்டுகோள். நம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் போது, முடிந்த வரை டாடா நிறுவன தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். படித்த இளைஞர்கள் டாடாவின் தயாரிப்புகளை வாங்க முன் வர வேண்டும். அதோடு விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சீனா பொருட்களை வாங்கவே வேண்டாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.