எம் தேசம் எம் உயிர்மூச்சு..! ஆனந்த சுதந்திரம் கொண்டாடுவோம்..!
Independence Day Wishes in Tamil-இந்திய நாட்டின் இருபெரும் தேசிய விழாக்களில் சுதந்திர தினமும் ஒன்று. அதை எண்ணி ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம் வாருங்கள்.;
Independence Day Wishes in Tamil
Independence Day Wishes in Tamil-ஆகஸ்ட் 15ம் தேதி 1947 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. அந்த நாளை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் மத்திய மாநில அரசுகள் விடுமுறை அளித்து அன்றைய தினம் சுதந்திர தின விழாவாக கொண்டாடி வருகிறது. நாட்டில் உள்ள முக்கிய இடங்களில் தேசியக்கொடி ஏற்றப்படும். அன்றைய தினம் நமது நாட்டின் தலைநகர் டில்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். மாநிலங்களில் முதலமைச்சர் தேசிய கொடியேற்றுவார்.
இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை நாம் இலகுவாக அனுபவிக்கிறோம். ஆனால் அந்த சுதந்திரத்தை பெறுவதற்கு எத்தனை இன்னுயிரை இழந்திருக்கிறோம். அந்த தியாகிகளை நினைந்து சுதந்திர நல்வாழ்த்துகளை கூறி மகிழ்வோம். இதோ உங்களுக்காக சுதந்திர தின வாழ்த்துகள் :-
சுதந்திர சுவாசத்தின் மூச்சுக்காற்று எம் பாரத தேசம் முழுவதும் வீசட்டும்..! தேசத்தின் கொடியது பட்டொளி வீசி பறக்கட்டும்..! யாவரும் இணைந்து கொண்டாடுவோம்..எம் சுதந்திரத்தின் வெற்றித் திருநாளை..!
என் தாய்த்திரு நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..! ஜெய்ஹிந்த்
இந்திய வானில் உயர்ந்து விரிந்திருக்கும் எம் தேசியக்கொடி சுதந்திரக்காற்றில் பறந்துகொண்டுள்ளது. அந்த சுதந்திரச் சிறகுகள் பல்லாயிரம் தியாக வீரர்களால் சாத்தியமானது. வேற்றுமை மலர்களால் ஆக்கப்பட்ட, ஒற்றுமை மாலையை சூட்டி மகிழ்ந்தோம். பாரத அன்னையை வண்ணம் மாறாமல் வாசம், பிறழாமல் வணங்கிக் காப்போம். அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள் !
உலகெங்கும் பரவி வாழும் அனைத்து இந்தியர்களுக்கும், இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள். எந்த நாட்டில் இருப்பினும் இன்று ஒரு சல்யூட் வைப்போம், எம் தேசியக்கொடிக்கு..! அன்னை பாரத தாய்க்கு நாம் செய்யும் மரியாதை..!
ஒன்றிணைவோம், ஒருங்கிணைவோம்..! ஓங்குபுகழ் நாட்டினது மாண்பு காப்போம்..! புகழ்பெற்ற தேசத்தை போற்றுவோம். இந்தியராக பெருமை கொள்வோம்..! சதந்திரதின வாழ்த்துகள்..!
உற்ற நட்பை கற்பென கொள்வோம்..! கற்ற கல்வியை கண் எனப் போற்றுவோம்..! பெற்ற சுதந்திரத்தை உயிர் எனக் காப்போம்...! அதுவே இந்தியக் குடிமகனின் தனித்த அடையாளம்..! அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்.
என தருமை இந்தியச் சோதரரே..! மொழிகள் வேறு பேசுகிறோம்..! வேறு வேறு மதங்களைக் கொண்டோம்.. ! ஆனால் பாரதமும் என்றதும் ஓர் தாய் பிள்ளையென்போம்..! எனது இதயம் நிறைந்த இந்திய சுதந்திர தின வாழ்த்துகள்.
பாரதத்தில் பிறந்து பாரதத்தில் வாழ்பவர்களுக்கு மட்டுமல்ல எவருக்குள் பாரதம் வாழ்கிறதோ அவர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்..! பண்பாட்டின் தாய்வீடு..!
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். பல லட்சம் பேரின் தியாகத்தால் கிடைத்தது, சுதந்திரம். விடுதலைக்கு வித்திட்ட வீரத் தியாகிகளை இன்று நினைவு கூர்வோம், இனிய வாழ்த்துச் சொல்வோம்.
உலகின் வேறெந்த நாட்டையும் விட மேலான எனது நாட்டின் சுதந்திரக் கொண்டாட்டத்தையும், மகிழ்ச்சியையும், அன்பையும் காண சூரிய தேவன் இங்கு வரட்டும்! – பகத் சிங்
உழைத்து வாழ்வோம்..! பகிர்ந்து உண்போம்..! மனிதம் போற்றுவோம்..! மகாத்மாவின் மாண்பு காப்போம்..! சுதந்திர தின வாழ்த்துகள்..!
சுதந்திரத்திற்காகப் போராடும் லட்சியவாதிகள் அழிந்துபோகலாம்..! ஆனால் சுதந்திர வேட்கை அழியவே அழியாது..! – சுபாஷ் சந்திரபோஸ்.
எங்கள் கனவு சுதந்திரமே..! அதை அடையப் போராடுவோம்! நாங்கள் மரித்தாலும், எங்கள் சந்ததிகளும் அதை அடையும் வரை போராடுவதை நாங்கள் மகிழ்ச்சியோடு பார்த்திருப்போம்! -ஆஷ்ஃபகுல்லா.
சுதந்திரத்திற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்கள் ஆயிரக்கணக்கான சுதந்திரப் பயிர்களுக்கான விதைகளை மக்களிடையே விதைத்து விடுறார்கள் – சுபாஷ் சந்திர போஸ்.
உதிரத்தை உரமாக்கி, உதித்த சரித்திரம் நம் சுதந்திரம்..! கதிரவன் எழும் ஆகஸ்து 15ல் எதிரெதிராயினும் பகை மறந்து ஒன்றிணைவோம்..சுதந்திர தின வாழ்த்துகள்
மனதில் விடுதலை, வார்த்தைகளில் நம்பிக்கை, உள்ளத்தில் பெருமை பொங்க முழங்குவோம், வந்தேமாதரம்..! வந்தேமாதரம்..!
பாரத நாடு பழம்பெரும் நாடு.. நாம் அதன் புதல்வர்..! இந்திய நாட்டின் மீது பற்றுடைய அனைத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
மந்திரத்தாலும், தந்திரத்தாலும் பெற்றதில்லை நம்முடைய சுதந்திரம்..! உதிரத்தாலும், பல உயிர் தியாகத்தாலும் கிடைத்ததே சுதந்திரம். இனிய சுதந்திரதின வாழ்த்துகள்..!
ஜாதி மதங்களால் பிரிக்கப்பட்டாலும் மனதால் இணைவோம்..! இனம் மொழிகளால் வேறுபட்டாலும் நாம் இந்தியனாய் ஒன்று சேர்வோம்.
இனிப்பான இந்நாளில் ஒரு தாயின் பிள்ளைகளாக நாம் எல்லோரும் சுதந்திர தினத்தைப் போற்றி மகிழ்ந்திடுவோம்.
நான் பிறந்தது என் தாயின் மடியில் ஆனால் நான் தவழ்ந்து நடந்தது எல்லாம் என் பாரதத்தாயின் மடியில்.
இரத்தத்தையும் தன் தேகத்தையும் நமக்காக, நம் தாய் நாட்டிற்காக தியாகம் செய்தவர்களுக்கு இதய அஞ்சலி செலுத்தும் உன்னதத் திருநாள் இன்று.
நம் தேசத்தை மீட்டெடுக்க உயிர்த்தியாகம் செய்த தலைவர்களை நினைவுகூர்ந்து போற்றி வணங்கிடுவோம் இந்த சுதந்திர தின நன்னாளில்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2