வருமான வரி செலுத்த காலஅவகாசம் நீட்டிப்பு
வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பைத்துள்ளது. அந்த உத்தரவின்படி ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து தொழில் பாதிப்புகளும் மற்றும் பொதுமக்கள் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரி செலுத்துவோர், வரி ஆலோசகர்கள் மற்றும் இதர பங்குதாரர்களின் கோரிக்கையை ஏற்று நேரடி வரி - விவாதங்களில் இருந்து விடுபட்டு நம்பிக்கையூட்டுதல் சட்டம் 2020 -ன் கீழ், 2021 ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டிருந்த கால அவகாசத்தை அரசு இன்று மேலும் நீட்டிப்புச் செய்துள்ளது.
வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள்(சில தளர்வுகள் அளிக்கும் வகையில்) 2020-ன் கீழ் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.