கேரளாவில் கொட்டும் மழை: 6 மாவட்டங்களில் பள்ளிளுக்கு விடுமுறை

கேரளாவில் கொட்டும் மழையால் 6 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

Update: 2023-07-06 02:00 GMT

கேரளாவில் பம்பை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி செல்லும் சிறிய ஆற்றில் (பம்பை ஆறு இல்லை) வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

கேரளாவில் பெய்து வரும் கனமழை இன்று முதல் தீவிரம் அடைந்துள்ளது. ஜூலை 6ம் தேதி மேலும் மழை வலுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் 12 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது பத்தனம்திட்டா முதல் காசர்கோடு வரையிலான 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொல்லம் மாவட்டம் மஞ்சள் எச்சரிக்கையில் உள்ளது. திருவனந்தபுரத்தில் மட்டும் சிறப்பு மழை எச்சரிக்கை எதுவும் இல்லை. இடுக்கி மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. கல்லார்குட்டி மற்றும் பாம்பிளா அணைகளின் ஷட்டர்கள் திறக்கப்பட வாய்ப்புகள் என அறிவிக்கப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூணாறு முத்திரபுழையாறு மற்றும் பெரியாறு கரையோரங்களில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பம்பை, மணிமலையாறு, மீனசிலாறு ஆகிய பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. கொச்சி, கோழிக்கோடு, பொன்னானி பகுதிகளில் கடல் சீற்றம்  கடுமையாக உள்ளது. 6 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கண்ணூர், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காசர்கோடு மாவட்டத்தில் கல்லூரிகள் தவிர பிற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குட்டநாடு தாலுக்காவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது.

ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், எம்ஜி பல்கலைக்கழகம், கண்ணூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இடுக்கி மற்றும் கோட்டயத்தில் முன் திட்டமிடப்பட்ட தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் கண்ணூர் மற்றும் இடுக்கியில் இரவு பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு இருவஞ்சி ஆற்றில் காணாமல் போன கோடியத்தூர் காரக்குட்டியை சேர்ந்த சி.கே.உசேன் என்பவரை தேடும் பணி நடந்து வருகிறது. தோட்டப்பள்ளியில் மரம் வெட்டும்போது காணாமல் போன அரசு அல்லாத தொழிலாளியை தேடும் பணி தொடரும். மலைப்பகுதிகளில் இருப்பவர்களும், கரையோரங்களில் வசிப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தீவிரம் குறைந்த பின்னர் அரசு அறிவிக்கும் அதன் பின்னர் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News