'இந்தி தேசிய மொழி' அஜய் தேவ்கனுக்கு சுதீப் பதிலடி..! அனல் பறக்குது..!

'இந்தி தேசிய மொழி' என்ற கருத்துக்கான அஜய் தேவ்கான் கூற்றுக்கு கன்னட நடிகர் கிச்சா சுதீப் பதிலடி கொடுத்துள்ளார்.

Update: 2022-04-28 05:39 GMT

அஜய் தேவ்கன், சுதீப் 

'இந்தி தேசிய மொழி' குறித்த விவாதம் தொடர்பாக நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் கிச்சா சுதீப் இடையே நேற்று  சர்ச்சை வெடித்தது. தென்னக நட்சத்திரம் கிச்சா சுதீப், கர்நாடகா டாக்கிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "இந்தி தேசிய மொழி அல்ல" என்று கூறினார். தென்னிந்திய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகளை முறியடித்து பெரும் வெற்றிபெற்று வரும் சூழலில் அவர் இவ்வாறு கூறினார்.

அஜய் தேவ்கன் ட்விட்டரில் சுதீப்பின் அறிக்கையை விமர்சித்து, "இந்தி எப்போதும் எங்கள் தாய் மொழியாகவும் தேசிய மொழியாகவும் இருக்கும்" என்று கூறியுள்ளார். அஜய் தேவ்கன் விமர்சனத்தைக் கண்டித்து, தென்னிந்திய படங்கள் தேசிய மொழி இல்லையென்றால் இந்தியில் ஏன் டப் செய்யப்படுகிறது என்றும் சுதீப் கேள்வி எழுப்பினார்.

தேவ்கனின் ட்வீட்டிற்குப் பிறகு, மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ட்வீட்களின் தாக்குதல் தொடங்கியது. அதன் பிறகு கிச்சா சுதீப் இறுதியாக இந்த விஷயத்தை வளர்க்க விரும்பவில்லை. இத்தோடு விட்டுவிட விரும்புவதாகக் குறிப்பிட்டார். ஆனால், கன்னடம்தான் எனது மொழி என்று ஒருவேளை கிச்சா சுதீப் கன்னடத்தில் ட்வீட் செய்திருந்தால் அஜய்க்கு புரிந்திருக்குமா என்று ஆச்சரியப்படாமல் இருக்கமுடியவில்லை.

'இந்தி தேசிய மொழி' என்ற அஜய் தேவ்கனின் கூற்றுக்கு இணையத்தில் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, நடிகை ரம்யா ஆகியோரும் 'இந்தி தேசிய மொழி' என்ற அஜய் தேவ்கனுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

Tags:    

Similar News