40 வயது ஐடி ஊழியர் கழிவறைக்குள் மாரடைப்பால் உயிரிழப்பு..!

ஐடி ஊழியர்களுக்கு பொதுவாக மன அழுத்தம் ஏற்பட்டு அடிக்கடி தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகளுக்கும் நடக்கின்றன. இன்னும் சிலருக்கு வேறுவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.;

Update: 2024-09-29 10:53 GMT

மாரடைப்பு (கோப்பு படம்)

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவன அலுவலகத்தின் கழிவறையில் 40 வயது ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்ததாகவும், இறந்தவர் எச்.சி.எல் டெக்னாலஜிஸின் மூத்த ஆய்வாளர் நிதின் எட்வின் மைக்கேல் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மிஹான் பகுதியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில் உள்ள கழிவறைக்குள் வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்ற அவர் எந்த உணர்வும் இன்றி காணப்பட்டதாக சோனேகான் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவரது சகாக்கள் உடனடியாக அவரை நாக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (AIIMS) அழைத்துச் சென்றனர். அங்கு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். உயிரிழந்தவர் மைக்கேல் என்பவர் ஆவார்.

சோனேகான் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்தனர். முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிவுகளின்படி அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மைக்கேலுக்கு மனைவி மற்றும் ஆறு வயது மகன் ஆகியோர் உள்ளனர்.

முன்னதாக செவ்வாய்கிழமையன்று, லக்னோவில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பணி அழுத்தம் காரணமாக உயிரிழந்தார். சதாப் பாத்திமா என அடையாளம் காணப்பட்ட ஊழியர், கோமதி நகரில் உள்ள HDFC வங்கியின் விபூதி காண்ட் கிளையில் கூடுதல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பெயர் தெரியாத சக ஊழியர்களை மேற்கோள் காட்டி, வங்கி வளாகத்திற்குள் நாற்காலியில் இருந்து விழுந்து அலுவலகத்திலேயே பாத்திமா உயிரிழந்துவிட்டார். அவர்  அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர்  இறந்துவிட்டதாக  அறிவிக்கப்பட்டது . பின்னர்  அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

Tags:    

Similar News