"நான் வேலைக்கு போகாமலேயே சம்பளம் வாங்குவேனே..!" கிரீன் கார்டு டீச்சர்..!
அரசு வேலை கிடைக்கவில்லையே என்று வருந்தும் எத்தனையோ பேருக்கு மத்தியில் கிடைத்த ஆசிரியர் வேலைக்குச் செல்லாமலேயே சம்பளம் வாங்கும் கொடுமையும் இருக்குங்கோ.;
gujarat teacher-சம்பளப்பட்டியல்
Gujarat Teacher, Gujarat,Banaskantha
குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆனால் மாநில அரசின் சம்பளத்தை இன்னும் பெற்று வருவதாக குஜராத் சமாச்சார் செய்தி வெளியிட்டுள்ளது.
Gujarat Teacher
அந்த அறிக்கையின்படி, பாவ்னா படேல் என்ற ஆசிரியையை பல ஆண்டுகளாக பள்ளிக்கு வரவில்லை என்று மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகள், தாங்கள் மூன்றாம் வகுப்பில் படிக்கும் போது கடைசியாக அந்த ஆசிரியையைப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பள்ளி ஊதிய பதிவேட்டில் பட்டேல் இன்னும் ஆசிரியராக பட்டியலிடப்பட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
பஞ்சா ஆரம்பப் பள்ளியின் தலைவராக இருந்த படேல், 2013ம் ஆண்டு முதல் சிகாகோவில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. அவர் அமெரிக்க கிரீன் கார்டையும் வைத்திருக்கிறார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருந்தபோதிலும், அவரது பெயர் இன்னும் பள்ளியின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது அவர் இன்னும் பள்ளியில் வேளையில் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.
Gujarat Teacher
இந்தியா டுடேயின் அறிக்கையின்படி, படேல் ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளியின் போது பள்ளிக்கு விடுமுறை விடப்படும் போது குஜராத் செல்கிறார். இருப்பினும், இந்த குறுகிய கால வருகைகளின் போது கூட, அவர் பள்ளிக்குச் செல்வதில்லை. மாணவர்களுடன் தொடர்புகொள்வதில்லை என்று அறிக்கை கூறுகிறது.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
தாலுகா கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் மாநில கல்வி அமைச்சர் ஆகியோரிடம் இந்த பிரச்னையை புகார் செய்ததாக பள்ளி தலைமையாசிரியர் பாருல் மேத்தா கூறியதாக குஜராத் சமாச்சார் தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் படேல் பள்ளிக்கு வருகை தந்ததாகவும், இந்த ஆண்டு முதல் ஊதியம் இல்லாமல் விடுமுறையில் இருப்பதாகவும் முதன்மைக் கல்வி அதிகாரி தெரிவித்தார்.
Gujarat Teacher
ஆசிரியைக்கு விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் கோரியதாகவும் கூறப்படுகிறது.
இப்படியான சம்பவனாலும் நடக்குமா என்று நாம் அதிர்ச்சி அடையத்தான் முடியும். ஆனால் நாதாந்த இருக்கிறது. அதை சப்பைக்கட்டு கட்டி அதற்கு விளக்கம் அளிக்க ஒரு அதிகாரியும் இருக்கிறார்கள் என்றால் அந்த ஆசிரியை பெரிய கில்லாடியாகத்தானே இருக்கவேண்டும்..!!
நம் முன் எழும் வினா..?
சுமார் எட்டு ஆண்டுகள் என்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் அவருக்கு வரும் சம்பளத்திற்கு கையெழுத்துப் போட்டது யார்? வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றாலும், சம்பளப்பட்டியல் தயாரிப்பவர் பள்ளியின் கணக்காளர்தானே? அப்பை என்றால் அவரும் இதற்கு உடந்தையா..? மாநில அரசு எதற்காக இன்னும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது? இப்படி எழுகின்ற சந்தேகம் மாநிலத்தில் அல்லது நாடு முழுவதும் இப்படி இன்னும் பலபேர் இருக்கலாமோ? வேலையே செய்யாமல் சம்பளம் வாங்குவோர் இன்னும் இருக்கலாமோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.