இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை: ஆக்ஸிஜன் தயாரிப்பு தீவிரம்

கோவிட் மூன்றாவது அலை இந்தியாவில் பரவ உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ள நிலையில், ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்பை தீவிரப்படுத்த அரசு முடிவு

Update: 2021-09-07 03:49 GMT

கோப்புப்படம்

கோவிட் மூன்றாவது அலை இந்தியாவில் பரவ உள்ளதாக ஐசிஎம்ஆர் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்சிஜன் சிலிண்டர்களை தயாரிக்க இந்தியா அரசு முடிவெடுத்துள்ளது.

ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போதிருந்தே ஆக்ஸிஜன் தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்தினால் மட்டுமே இலக்கை எட்ட முடியும் என மருத்துவ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

அதன்படி, லிண்டே இந்தியா நிறுவனம் இந்திய ஆக்ஸிஜன் தயாரிப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆக்ஸிஜனை தயாரிக்க மத்திய அரசுடன் ஒப்பந்தம் இட்டுள்ளது. தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அரசு மருத்துவமனையில் தயாராக இருக்கும்போது பலரது உயிரைக் காக்கமுடியும். மேலும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 

Tags:    

Similar News