உலக பத்திரிகை சுதந்திரம் : இந்தியாவுக்கு 142வது இடம்
பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 142வது இடம் கிடைத்துள்ளது.
உலக பத்திரிகை சுதந்திரம் குறித்த பட்டியலில் இந்தியாவுக்கு 142 வது இடம் கிடைத்துள்ளது. பத்திரிகை சுதந்திரம் பற்றிய எல்லைகளில்லா நிருபர்கள் என்ற அமைப்பு வெளியிட்ட இந்த பட்டியலில் 180 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன.
பத்திரிகை சுதந்திரம் அளிப்பதில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து பின்லாந்து 2ம் இடத்திலும், டென்மார்க் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. கிழக்கு ஆப்ரிக்க நாடான எரித்ரியா கடைசி இடம் பிடித்துள்ளது. சீனா 177வது இடமும், பாகிஸ்தானுக்கு 145ம் இடமும், நேபாள் நாட்டுக்கு 106வது இடமும், இலங்கை 127வது இடத்திலும் உள்ளன. வங்கதேசம் 152ம் இடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் குறித்து கடுமையான பதிவுகளையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.