இந்திய விமானப்படைக்கு வானில் பறக்கும் ராட்சஷன்

ரபேல் விமானங்களை வாங்கி, விமானப்படையினை பலப்படுத்திய இந்தியா, அடுத்த நடவடிக்கையாக Bomber என்ற ராட்சஷ விமானத்தை வாங்க உள்ளது.

Update: 2022-08-12 03:00 GMT

பைல் படம்.

இந்தியா வாங்க போகும் இந்த Bomber விமானம் உலகிலேயே மிகப்பெரியது. ரஷ்யாவின் நம்பிக்கை நட்சத்திரம் - TU160!!! என்ற இந்த Bomber. நம்மிடம் இதுவரை ஒரு Bomber கூட இல்லை. போர் என்று வந்தால்... கடலில் நீர்மூழ்கி - ஆகாயத்தில் Bomber என இரண்டுமே, எதிரிகளின் முக்கிய நகரங்களை நரகமாக்கும் இரத்தகாட்டேரிகள்!!!

ஒரு நகரத்துக்கு ஒரு விமானம் போதும்!!! அதிலும் இதில் அணு ஆயுத வெடிகுண்டுகளை வைத்தால் இந்த ஒத்த விமானம் - பல நகரங்களை நிரந்தரமாய் நரகமாக்கிவிடும்!!! 6Nos... TU 160 Startegic Bomber வாங்க பிரதமர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியாச்சு!!! அதிக விலை கொண்ட - மிக முக்கிய அதீத தொழில்நுட்ப ஆயுதங்கள் பிரதமர் அலுவலக ஒப்புதலின் கீழ் வரும்!!!

ஒவ்வொரு விமானமும் கிட்டதட்ட ₹1300கோடி!!!

ஏன் இந்த Bomber?:

இந்தியாவின் மிகப்பெரிய போர் விமானமான Su-30 MKI ஒரு மூச்சில் அதிகபட்சமாக 8டன் ஆயுதத்தை தூக்கி கொண்டு 3000km தூரம் மட்டுமே பறந்து சென்று தாக்கும்!!! அதிலும் 2டன் வெடிகுண்டு மட்டுமே வைக்க முடியும், மீதியெல்லாம் ஏவுகணையே!!! இதே நிலைமை தான் Rafaleக்கும்!!!

ஆனால் இந்த TU 160என்பது 40டன் வெடிகுண்டுகளை சுமந்து கொண்டு கிட்டதட்ட 14 ஆயிரம் கி.மீ தூரம் செல்லும்.... இதன் உச்சபட்ச வேகம் 2Mach (2220 km/h)... உச்சபட்ச உயரம் 51 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும்!!! இங்கிருந்து அமெரிக்காவுக்கு நிக்காமல் செல்லலாம்....!

சுக்கோயோ இங்கிருந்து எகிப்து போகவே... துபாயிலோ அல்லது ஓமனிலோ வானில் வைத்து எரிபொருள் நிரப்ப வேண்டும். அதேபோல்.... கிட்டதட்ட 8-10 சுகோய் சுமக்கும் வெடிகுண்டுகளை இந்த ஒத்த விமானம் சுமந்து கொண்டு தாக்கும்.... மொத்தத்தில் ஒரு மிகப்பெரிய சரக்கு விமான அளவிலான தாக்குதல் விமானம்!!! அமெரிக்காவிடம் உள்ள Bomber களை விட இது மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News