இந்திய ராணுவத்திற்கு புதிய கவச வாகனம்
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு புதிய கவச வாகனங் கள் வழங்கப்பட்டுள்ளன;
"மேக் இன் இந்தியா" திட்டப்படி இந்தியாவின் மகேந்திரா நிறுவனமும் இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து செய்த ராணுவ கவச வாகனம் இப்போது நாட்டுக்கு அர்பணிக்கபட்டிருகின்றது. ராணுவத்தில் முக்கியமான விஷயம் இந்த கவச வாகனம். போர் நடக்கும் நேரம் வீரர்களை பத்திரமாக இடமாற்றம் செய்ய இந்த வாகனங்கள் அவசியம். இவை குண்டு துளைக்காத உலோகத்தால் செய்யப்பட்டது.
கண்ணி வெடியில் சிக்கினாலும் தாக்கு பிடிக்கும் உத்தி கொண்டது. கடினமான மலைப்பகுதிகளில் உந்து சக்தியுடன் என எங்கும் செல்லும் லாவகம், எல்லா பருவ சூழலிலும் இயங்கும் தன்மை என மிகவும் கவனமாகப் பார்த்து பார்த்து செய்யபட்ட வேண்டும். இதனை இதுவரையிலும் வெளிநாட்டில் இருந்து தான் வாங்கினோம். இந்த வகையில் ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் பெரும் பணமும் வெளிநாட்டுக்கே சென்றது. பாதுகாப்புத் துறையில் இந்திய நிறுவனங்கள் புகுந்து விட முடியாத ஒரு சூழல் உருவாகி இருந்தது.
மோடி இதனை மாற்றினார். இந்தியாவின் பெரும் நிறுவனங்கள் இந்திய அரசோடு இணைந்து பல்வேறு வகை ஆயுதங்களை தயாரிக்க வழிவகுத்தார். இதனால் இங்கே வேலைவாய்ப்பு பெருகிற்று. அதே நேரம் பணமும் வெளியே செல்லவில்லை. இப்போது முழு இந்திய தயாரிப்பான கவச வாகனங்கள் நாட்டுக்கு கிடைத்திருக்கின்றன. இனி இவற்றை ஏற்றுமதியும் செய்யலாம். நாட்டின் வளம் பெருகும்.
மோடியின் கனவு தன்னிறைவு பெற்ற இந்தியா, எல்லா வகையிலும் தன் சொந்த தயாரிப்பினை செய்து மேலேறி நிற்கும் மிக வலுவான இந்தியா. பிரதமர் மோடியின் பெரும் திட்டங்கள் அனைத்தும் வெற்றியடைய தொடங்கியிருக்கின்றன.