National Herald Case Live: அமலாக்கத்துறை முன் சோனியா ஆஜர்

National Herald Case - டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காங்கிரஸ் எம்பிக்கள், தொண்டர்கள் புடைசூழ பேரணியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வந்தார்.

Update: 2022-07-21 07:25 GMT

National Herald Case - National Herald Case Live நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் மத்திய அமலாக்கத்துறை கடந்த மாதம் 8-ம் தேதி ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், சோனியாகாந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.

இதற்கிடையே, ஜூலை 21-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் சம்மன் அனுப்பியது. இதை ஏற்று சோனியா காந்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார்.

சோனியாகாந்தியுடன், அவரது மகள் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகம் சென்றுள்ளார். டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வந்தார். காங்கிரஸ் எம்பிக்கள், தொண்டர்கள் புடைசூழ அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

சோனியா காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் தலைநகர் பாட்னா உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்கு விற்பனை குறித்து ஏற்கனவே ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வரும் செய்திகளுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Live Updates
2022-07-21 08:09 GMT

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் காருக்கு தீ வைத்தனர். இந்த தீவைப்பு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

2022-07-21 07:36 GMT

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்

2022-07-21 07:34 GMT

காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு, வேனில் ஏற்றப்பட்டனர்

2022-07-21 07:31 GMT

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் பலர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்தனர்.

அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வெளியே காங்கிரஸ் மாநிலத் தலைவர் கரண் மஹ்ரா, எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா, துணைத் தலைவர் புவன் கப்ரி ஆகியோர் தலைமையில் நடக்கும் பலத்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

2022-07-21 07:29 GMT

காங்கிரஸ் எம்பி சசி தரூர் கைது செய்யப்பட்டார்

2022-07-21 07:28 GMT

சோனியா காந்தியின் வீட்டிற்கு ED சென்று விசாரணை நடத்த வேண்டும்: அசோக் கெலாட்

2022-07-21 07:27 GMT

கன்னாட் பிளேஸ் அருகே உள்ள ஜன்பத் சாலையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்

Tags:    

Similar News