மறைந்திருந்து தாக்கும் மர்மமென்ன ....
ரஷ்ய அதிபர் மாளிகையில் டிரோன் தாக்குதல் நடத்தியது யார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.;
பைல் படம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மாஸ்கோவில் தங்கி இருக்கும் அதிகாரப் பூர்வமான இல்லம் அமைந்துள்ள க்ருமிளின் மாளிகை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பறக்கும் ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்டது. இதனை செய்தது தாங்கள் அல்ல என உடனடியாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார் உக்ரைனிய அதிபர் ஜெலன்ஸ்கி.
ஆமாம்... அவர் சொன்னது போல் அவர் மட்டுமே காரணமல்ல என்பது ஊர் அறிந்த ரகசியம். ஆனால் சரியாக அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களின் டிபென்ஸ் தரப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் ஹேண்டில் நம்முடைய காளி படத்தை அரைகுறையாக... அதுவும் வெடிப்பின் போது எழும் புகை மண்டலத்தின் ஊடாக சித்தரித்து வெளியிட்டு அதிரடித்திருந்தார்கள்.
முதலில் அதற்கு வொர்க் ஆஃப் டிவைன் ஆர்ட் என்றனர்.... பின்னர் வார் ஆர்ட் என்றனர்.... கட்டக் கடைசியாக அதற்கும் தங்களுக்கு துளியும் சம்மந்தம் இல்லை என்றனர். மிகப்பெரிய தவறு நேர்ந்து விட்டது என்று மன்னிப்பெல்லாம் கேட்டது பிறகு நடந்தது. என்ன தான் நடக்கிறது உக்ரைன் ரஷ்யா விஷயத்தில்....? ஒற்றை சொல்லில் சொல்வதானால் .....விஷத்தை விதைத்து கொண்டிருக்கிறார்கள் மேற்கு உலக வக்ர மனம் கொண்டவர்கள்.
சரியாக சொல்வதென்றால் ஜோபைடனை ஆட்டி விக்கும் மாயாவிகள் இதன் பின்னணியில் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது என்கிறார்கள் உலக அரசியல் பார்வையாளர்கள். சரி அவர்களுக்கு ஏன் இத்தனை தூரம்...., என்று யாரேனும் ராகம் பாடினால்.... ஆயில் மற்றும் ஆயுத வியாபாரம் என சுருக்கமாக முடித்து கொள்கிறார்கள். சொல்லி வைத்தார் போல் இவையெல்லாம் உண்மை என்கிற ரீதியில் தான் காரியங்கள் நடைபெற்று வருகிறது. அப்படி இருப்பதையும் சுட்டிக் காட்ட தவறவில்லை அவர்கள்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவின் முதல் தரமான நாசகாரி கப்பல் மோஸ்குவாவை வெகு சுலபமாக தாக்கி மூழ்கடித்திருந்தனர். நிச்சயமாக இது உக்ரைனால் முடிய கூடிய காரியம் இல்லை. பின்புலத்தில் ஒரு படையே திரண்டு வேலை பார்த்து இருக்கிறது. இதற்கெல்லாம் தலைமை தாங்கியது அமெரிக்கா என்பது எல்லோருக்கும் புரிந்து போனது. ரஷ்யா பெரிய அளவில் இதற்கு வினை புரியவில்லை. அமைதி காத்தது. இதற்கு அடுத்ததாக நார்டு ஸ்ட்ரீம் பைப் லைன் எனப்படும் ரஷ்யாவிற்கு சொந்தமான பால்டிக் கடலில் புகைப்பட்ட எரிவாயு குழாய்களை வெடி குண்டு வைத்து நாசம் செய்தனர்.
இதன் மூலமாக ஐரோப்பா கண்டம் முழுமைக்கும் எரிவாயு விநியோகம் நடந்து வந்தது. அங்கு தொட்டு இங்கு தொட்டு விசாரணை வளையத்தில் அமெரிக்காவை கை காட்டினார்கள் பலரும். ரஷ்யா இதற்கும் வாய் திறக்கவில்லை. போதாக்குறைக்கு உக்ரைனுக்கு என ஜோபைடன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் இருப்பில் உள்ள ஆயுதங்களை எடுத்து நன்கொடையாக... சிலவற்றை கடனாக வாரி வழங்கி இருக்கிறார்.
ஆனாலும் கூட சண்டை முடிந்த பாடில்லை..... உக்ரைன் ஜெயித்த பாடில்லை...இதற்கு மத்தியில் இந்திய ஆதரவு தங்களுக்கு தான் என வெளிப்படையாக அறிவிக்க ஏகப்பட்ட அழுத்தங்களை இந்திய அரசு மீது திணித்து வருகிறார்கள். தங்கள் வசம் உள்ள ஊடகங்களை கொண்டு கேள்வி கேட்கிறேன் பேர்வழி என நம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஜெய்சங்கரிடத்தில் ரஷ்ய கச்சா எண்ணை வாங்கி நீங்கள் அவர்களுக்கு நிதியுதவி செய்கிறீர்களா என கேள்வி கேட்டு மூக்குடைத்து கொண்டனர். நம்மவர் இதற்கு சொன்ன பதில் அத்தகையது.... என் செய்வது.
அமெரிக்காவில் ஜோபைடன் ஆட்சியில் கன ஜோராக பல குழப்பங்கள் நடக்கிறது. திரும்பி பார்ப்பதற்கு முன்பாக 2024 ஆம் ஆண்டு இறுதியில் அங்கு தேர்தல் வரவிருக்கிறது. அமெரிக்க அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அதிபருக்கும் கிடைக்காத ஒற்றை இலக்க ஆதரவு அவருக்கு பெறுகி கொண்டே போகிறது. எல்லாவற்றையும் சரிக்கட்ட ... போர் ஒன்று தான் வழி என்று களம் இறங்கி அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள் ஜோபைடன் ஆதரவாளர்கள். அதாவது ஜோபைன் கட்சியினர்.
போதாகுறைக்கு ஜோபைடனின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள் எல்லாம் கன ஜோராக நடக்கிறது. என்ன ஒன்று, தற்போது இங்கு பிரதமர் மோடியை சரிகட்ட முடியவில்லை. ஏகப்பட்ட கெடுபிடி செய்கிறார் இவர்.... வழிக்கு வர மாட்டேன் என அடம் பிடிக்கிறார் என்றெல்லாம் திரைமறைவில் கருவிக்கொண்டு இருக்கிறார்கள். பக்குவமாக காய் நகர்த்துவதாக நினைத்து கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடக்கவிருக்கும் மாலத்தீவு அதிபர் தேர்தலில் சீன ஆதரவு அதிபரை பதவிக்கு கொண்டு வர படாதபாடு பட்டுக்கொண்டு வருகிறார்கள். இலங்கை விவகாரத்தில் மீண்டும் அமெரிக்காவின் பேச்சை கேட்பவர்களை பதவிக்கு கொண்டு வர.... விடுதலை புலிகளின் சமாச்சாரத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்..... இத்தனை காலத்திற்கு பிறகு பிரபாகரன் உயிருடன் இருப்பதாக ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மத்திய அரசு என பேச சொல்லி.. சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.
மொத்தத்தில் நம் இந்திய தேசத்தை பணியவைக்க கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள் மேற்குலக நாடுகள். உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை ஆணிவேர் போன்று ஒரே கூட்டத்தை சேர்ந்த ஒரு சிலர் ஊடுருவி நம்மை அசைத்து பார்க்க துணிந்திருக்கிறார்கள் என்றால்.... என்ன செய்ய போகிறோம் நாம்..? இப்போது நமக்கு இருக்கும் ஒரே சாதகமான சூழல், இந்தியாவின் வலுவான தலைவர். வலுவான மத்திய அரசு.