40 -க்கு மூச்சுவிட உதவிய 85

85 வயது முதியவர் தனது படுக்கையை 40 வயது இளைஞருக்கு விட்டுக்கொடுத்த சம்பவம் மஹாராஷ்டிராவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Update: 2021-04-29 05:57 GMT

மஹாராஷ்டிராவில் 40வயது இளைஞருக்கு உதவிய 85வயது நாராயண் 

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அங்கு கொரோனா தொற்று பாதித்த நாரயண் என்ற 85 வயது முதியவர் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். அதே மருத்துவமனையில் ஒரு பெண் தனது 40 வயது கணவருக்காக மருத்துவமனையில் இடம் கேட்டு கதறி அழுது மன்றாடிக் கொண்டிருந்தார் . ஆனால் அவருக்கு அங்கு இடம் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது.

இதை பார்த்த நாராயண் மருத்துவர்களிடம் நான் என் வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். அந்த இளைஞரின் உயிர் முக்கியம். அவரது குழந்தைகளும் சிறு வயதினர். அதனால், என் படுக்கையை அவருக்கு கொடுங்கள் என்று வீட்டுக்குச் சென்று விட்டார். வீட்டுக்குச் சென்ற அவர் 2 நாட்களிலேயே உயிரிழந்து விட்டார். இதை அவரது குடும்பத்தினர் கூறினார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வெப்சைட்களில் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து அவரது மகள் கூறும் போது, கடந்த ஏப்ரல் 22ம் தேதி 85 வயதான என் தந்தைக்கு ஆக்சிஜன் லெவல் குறையாத தொடங்கியது. ஐ.ஜி.ஆர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். பெரிய முயற்சிக்குப் பிறகு அவருக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைத்தது. ஆச்சர்யமாக படுக்கையும் கிடைத்தது. ஆனால் 2 மணி நேரத்தில் கடைசி நேரத்தை எங்களுடன் கழிக்க விரும்புவதாக மருத்துவமனையிலிருந்து வந்து விட்டார்.

மருத்துவமனையில் இவரது ஆக்சிஜன் லெவலும் இறங்கிக் கொண்டிருந்தது. அந்தவேளையில் அதே மருத்துவமனையில் ஒரு பெண் தனது கணவருக்காக அனுமதி கேட்டு கதறி அழுது கொண்டிருந்தார். ஆனால், அவருக்கு அங்கு இடம் கிடைக்கவில்லை. இங்கு இடமே இல்லை.எப்படி நாங்கள் அனுமதிப்பது? என்று கூறிவிட்டனர்.

இந்த காட்சியை 85 வயது முதியவர் நாராயண் பார்த்துக்கொண்டிடுந்தார். அவருக்குள் மனது கசிந்து போனது. மருத்துவர்களிடம் சென்று, 'நான் என் வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன். அந்த இளைஞரின் உயிர் முக்கியம். அவரது குழந்தைகளும் சிறு வயதினர். என் படுக்கையை அவருக்குக் கொடுங்கள்.' என்று கூறியுள்ளார். மருத்துவர்கள் அவரிடம் உங்கள் உடல் நிலை சரியாக இல்லை உங்களுக்கும் சிகிச்சை அவசியம் என்று கூறியுள்ளனர்.

ஆனால்,அவரோ தன் மகளைக் கூப்பிட்டு அவரிடம் சூழ்நிலையை விளக்கி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றார். அதேபோல் அந்த 45 வயது நபருக்கு மருத்துவமனையில் இடம் கிடைத்தது. அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது. ஆனால், முதியவர் நாராயண் வீட்டுக்குச் சென்று 3 நாட்கள்தான் உயிரோடு இருந்தார். அதன்பின்னர் முதியவர் இறந்துவிட்டார்.

நாராயண் தபால்கர் இன்னொரு நோயாளிக்காக தன் மருத்துவமனை படுக்கையை தியாகம் செய்ததாக பதிவு வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலானது.

Tags:    

Similar News