வாட்ஸ்ஆப்பில் தடுப்பூசி சான்றிதழ்: சுகாதார அமைச்சகம் அசத்தல் ஏற்பாடு

வாட்ஸ்ஆப்பில் தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யும் வகையில் மத்திய சுகாதார அமைச்சகம் புதிய ஏற்பாட்டை செய்துள்ளது.

Update: 2021-08-09 02:56 GMT

வாட்ஸ்ஆப் மாதிரி படம்.

இப்பெல்லாம் வீட்டு வேலைக்கு போகணும் என்றாலும் தடுப்பூசி போட்டீங்களா என்று கேட்கும் நிலை வந்துவிட்டது. அதனால் எல்லோரும் தடுப்பூசி போடுவதே சிறந்தது.

தடுப்பூசி போட்டாச்சா? என்று மட்டும் கேட்டால் பரவாயில்லை. ஆனால், ஆதாரம் எங்கே? என்று அடுத்த கேள்வி வந்து விழும். அதற்கான சான்று எங்கே என்றும் கேட்பார்கள். ஆதார் அட்டை அளவிற்கு சமமான ஒரு முக்கிய அடையாளமாக தடுப்பூசி சான்றிதழ் வந்துவிட்டது.

அதுக்காக நாம் கையில் வைத்துக்கொண்டா அலைய முடியும்? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. அதற்காகவே  இப்போது எளிய நடைமுறை வந்துவிட்டது. ஆமாங்க.. மொபைல் போனில் வைத்துக்கொள்ளலாம்.

வாட்ஸ்ஆப் வழியாகவே கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்யம் வசதி வந்தாச்சு.

வெறுமனே வாட்ஸ்ஆப்பில் 9013151515 என்கிற எண்ணிற்கு 'Download Certificate' என்று மெசேஜ் அனுப்பினால் போதும். நீங்கள் உங்களுக்கான சான்றிதழை பிடிஎஃப் ஃபைலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கும் இப்போது கோவிட் சான்றிதழ் முக்கியம். இதை கருத்தில் கொண்டு மத்திய சுகாதார அமைச்சகம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. 

Tags:    

Similar News