கொரோனா விதிமுறைகளை மதிக்காவிட்டால் 3ம் அலை வேகமாக வரும் : டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை
கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் மதிக்காவிட்டால் 3ம் அலை வேகமாக வரும் என்று டில்லி ஐகோர்ட் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
டில்லி மக்கள் பொது இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அஜாக்கிரதையாக உள்ளனர். இது மூன்றாம் அலைக்கு வித்திடும் என்று டில்லி உயர் நீதிமன்றம் எச்சரிகை தெரிவித்துள்ளது.
டில்லியில், கொரோனாவால் ஏற்படும் தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அதனால், டில்லியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல், கடைகளிலும், மால்களிலும்,சந்தைகளிலும் மக்கள் அதிகமாக கூடுகின்றனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல், மக்கள் கூடுவதால் வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பது டில்லி உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சென்றது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால், 3ம் அலையை விரைவுபடுத்தும். மக்கள் இவ்வாறு நடந்து கொள்வது சரியானது அல்ல என்று டில்லி உயர் நீதிமன்றம் எச்சரிகை தெரிவித்துள்ளது.
தற்போது டில்லியில் நிலவும் சூழல் குறித்து அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கும், டில்லி அரசுக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பொது இடங்களில் விதிகளை மீறி நடப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.