தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

Update: 2021-03-29 09:15 GMT

மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், கேரளா, தமிழ்நாடு மற்றும் சட்டீஸ்கரில் தினசரி கொவிட் பாதிப்பு அதிகரித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், 68,020 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 84.5 சதவீதம் பேர் மேற்கண்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிக பட்சமாக தினசரி கொவிட் பாதிப்பு 40,414 ஆக உள்ளது.நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இன்று 5,21,808 ஆக உள்ளது.நாட்டில் கொவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 6 கோடியை கடந்து விட்டது. இன்று காலை 7 மணி வரை, 6.05 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

72வது நாளான நேற்று, மொத்தம் 2,60,653 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,13,55,993-து எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 32,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 291 பேர், கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது

Tags:    

Similar News