Breaking News: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்;

Update: 2022-06-02 08:38 GMT

சோனியா காந்தி

சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதன்பின் தனிமைப்படுத்தி கொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர் தற்போது குணமடைந்து வருகிறார் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை யங் இந்தியா அசோசியேட் நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

சோனியா காந்தி நேரில் ஆஜராக அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News