இந்திய தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய சீன இறக்குமதி
சீன பொருட்களின் இறக்குமதி அதிகரிப்பால் இந்திய சிறு, குறு வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து GTRI ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சீனாவில் இருந்து குடைகள், பொம்மைகள், இசைக்கருவிகள் போன்ற பொருட்களின் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) பாதிக்கப்பட்டுள்ளன.
GTRI வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் அறிக்கையின் படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல பொருட்கள் இந்திய வணிக நிறுவனங்களால் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
2024 ஜனவரி முதல் ஜூன் 2024 வரையிலான காலத்தில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை $41.9 பில்லியனாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, இந்தியா இறக்குமதி செய்யும் தொழில்துறை சார்ந்த பொருட்களில் கிட்டத்தட்ட 29.8% சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் வர்த்தகப் பற்றாக்குறையைப் பற்றி இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்றும் இருப்பினும் சீனா போன்ற நாடுகளில் இருந்து தொழில்துறை சார்ந்த பொருட்களின் இறக்குமதியைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் GTRI அறிவுறுத்தியுள்ளது.