Chemicals Fire-ஹைதராபாத்தில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி..!

ஹைதராபாத் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் தீயில் வெந்து இறந்துள்ளனர். 14 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2023-11-13 07:27 GMT

chemicals fire-தரைத் தளத்தில் தீக்குத் தப்பி  வெளியே கொண்டுவரப்பட்ட ரசாயன ட்ரம்கள்.

Chemicals Fire,Residential Fire,Bazarghat,Residential Area,National Disaster Response Force,Hyderabad Fire

ஹைதராபாத்தில் நடந்த இந்த தீ விபத்தின் முதற்கட்ட விசாரணையில், தரைத் தளத்தில் காரை பழுதுபார்க்கும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்பபோது அங்கு ரசாயனத்தை சேமித்து வைத்திருந்த பல டிரம்களும் இருந்ததால் அந்த ட்ரம்களுக்கும் தீ பரவியது.


இன்று (திங்கள்கிழமை) காலை ஹைதராபாத்தில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் தரைத் தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரசாயன டிரம்ஸில் தீப்பிடித்ததில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 

காவல் துணை ஆணையர் (மத்திய மண்டலம்) எம்.வெங்கடேஷ்வர்லு செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவம் நம்பள்ளி அருகே பஜார்காட் குடியிருப்பு பகுதியில் இன்று காலை 9:30 மணியளவில் நடந்தது.

உள்ளூர்வாசிகளின் கூறிய தகளின்படி , அது தரைத் தளத்தின் ஒரு பகுதியில் சிறிய தீயாகத் தொடங்கியது. விரைவில் முழு பகுதிக்கும் பரவியது. காலை 9:38 மணியளவில் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. நாங்கள் ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம், ”என்று அவர் கூறினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படைக்கும் (NDRF) இந்த தகவல் முன் எச்சரிக்கைக்காக தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்க இரண்டு குழுக்களை அனுப்பினர்.

"நாங்கள் ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து கட்டிடத்தில் சிக்கியிருந்த 21 பேரை மீட்டு உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்" என்று வெங்கடேஷ்வர்லு கூறினார்.


கட்டிடத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டவர்களில் 8 பேர் சுயநினைவின்றி இருப்பதாக அவர் கூறினார்.

"மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, அவர்களில் ஏழு பேர் இறந்தனர் - சிலர் தீக்காயங்கள் மற்றும் மற்றவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக" என்று டிசிபி கூறினார்.

அந்த இடத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தரைத் தளத்தில் காரை பழுதுபார்க்கும் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு இரசாயனத்தை சேமித்து வைத்திருந்த பல டிரம்களும் வைக்கப்பட்டிருந்தன.

"இது ஃபைபர்-பிளாஸ்டிக் உற்பத்தியில் சேமிக்கப்படும் ஒரு எரியக்கூடிய இரசாயனமாகும். தீப்பொறி எப்படி வெடித்தது? எப்படி ரசாயனம் தீப்பிடித்தது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை” என்று டிசிபி கூறினார்.

அத்தகைய ரசாயனங்களை சேமித்து வைக்க அனுமதி இல்லை என்றார் .

“அது அடர்ந்த குடியிருப்பு பகுதி. அத்தகைய அபாயகரமான இரசாயனங்கள் எதையும் அவர்கள் சேமிக்கக் கூடாது. ஆனால், புகார் வந்தால் ஒழிய நடவடிக்கை எடுக்க முடியாது,'' என்றார் வெங்கடேஷ்வரலு. 

Tags:    

Similar News